வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு டிக்கி சாட்

Photo of Aloo Tikki Chaat by Pavani Nandula at BetterButter
37721
626
4.5(0)
3

உருளைக்கிழங்கு டிக்கி சாட்

Feb-24-2016
Pavani Nandula
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்து, தோல் உரித்தது மற்றும் மசித்த்த நடுத்தரமான உருளைக்கிழங்கு-2
  2. பச்சைப் பட்டாணி - 1/2 கப்
  3. கருஞ்சீரகம்- 1/2 டீக்கரண்டி
  4. சீரகம்- 1 டீக்கரண்டி
  5. நன்றாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய்-2~3
  6. நன்றாக வெட்டப்பட்ட கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
  7. சோளமாவு-1 தேக்கரண்டி
  8. வேகவைத்தத கொண்டைக்கடலை- 2 கப்
  9. நன்றாக வெட்டப்பட்ட வெங்காயம்-1 சிறியது,
  10. குறுக்காக வெட்டப்பட்ட பச்சை மிளகாய்- 1-2
  11. அரைத்த கொத்தமல்லி - 1 டீக்கரண்டி
  12. அரைத்த சீரகம் - 1 டீக்கரண்டி
  13. சிகப்பு மிளகாய்தூள்- 1 டீக்கரண்டி (சுவைக்கேற்றவாறு சரிசெய்துகொள்ளவும்)
  14. மஞ்சள்தூள்- 1 டீக்கரண்டி
  15. கரம் மசாலா- 1/2 டீக்கரண்டி
  16. தக்காளி விழுது- 2 தேக்கரண்டி( அல்லது 1 பழுத்த தக்காளி)
  17. உப்பு மற்றும் மிளகு- சுவைக்கேற்ப
  18. சேவ் பரிமாறுவதற்காக
  19. பேரிச்சை- புளிக்கரைசல் - பரிமாறுவதற்காக
  20. கொத்தமல்லி சட்னி- பரிமாறுவதற்காக
  21. கெட்டியான தயிர் - பரிமாறுவதற்காக
  22. சிகப்பு வெங்காயம் - அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலை செய்ய: கடாயில் 2 டீக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் அல்லது அது வதங்கும் வரை வேகவிடவும். அத்துடன் அரைத்த சீரகம், அரைத்த கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் தூள், maan, கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்றாக சேர்த்து கலந்துக்கொண்டு 1-2 நிமிடம் வேகவிடவும்.
  2. அடுத்து தக்காளி விழுது சேர்த்து வேகும் வரை தொடர்ந்து 2-3 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. வேகவைத்த கொண்டைகடலையையும், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து 4-5 வேகவிடவும், அப்பொழுது கொண்டைகடலையை உருளைக்கிழங்குவுடன் லேசாக மசித்துவிடவும். இதனை பரிமாறத் தயாராக தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. உருளைக்கிழங்கு பட்டீஸ் செய்ய: கடாயில் 2 டீக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி சூடு செய்து அதில் கருஞ்சிரகம் மற்றும் சீரகத்தை சேர்க்கவும் அவை பொரிந்து வரும் பொழுது பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடம் வேகவிடவும்.
  5. ஓர் கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கொத்தமல்லி இலை, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சூடேற்றவும். அந்த கலவையை 8 சமமான பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும். அதனை உருண்டைகளாக உருட்டி நேரான தட்டையாக செய்துக் கொள்ளவும்.
  6. நான்ஸ்டிக் பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு டிக்கிகளை இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை வேகவிடவும், ஒவ்வொரு பக்கமும் 2-3 நிமிடம் வேகவேண்டும்.
  7. பரிமாறுவதற்கு: தட்டில் 2 டிக்கிகளை வைத்து அதன் மேல் சிறிது கொண்டைக்கடலை, சேவ், பச்சை சட்னி மற்றும் புளி சட்னியை அதன் மீது இடவும். பிறகு அதை உடனடியாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்