வீடு / சமையல் குறிப்பு / கொல்க்கத்தா பாணி எக் ரோல்

Photo of Kolkata Street Style Egg Roll by Moumita Malla at BetterButter
14645
504
4.0(0)
0

கொல்க்கத்தா பாணி எக் ரோல்

Feb-28-2016
Moumita Malla
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • மேற்கு வங்காளம்
  • ரோசஸ்டிங்
  • அப்பிடைசர்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா - 3/4 கப்
  2. முட்டைகள் - 2
  3. வெள்ளரிக்காய் - 1/2 (நறுக்கியது)
  4. வெங்காயம் - 1 நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
  6. தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. ரீபைண்டு ஆயில் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மைதாவோடு கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பார்த்திரத்தில் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மாவில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மிருதுவான மாவாக கொஞ்சம் தண்ணீர் விட்டுத் தயாரித்துக்கொள்ளவும்.
  2. மாவை ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  3. இப்போது மாவை 1 நிமிடம் பிசைந்து 2 சம அளவுள்ள உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு உருண்டையை எடுத்து 6 இன்ச் விட்ட அளவில் வட்டமாக உருட்டிக்கொள்க.
  5. ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை எடுத்து கோஞ்சம் உப்பு தூவி அடித்துக்கொள்ளவும்.
  6. கடாயை ஒரு முறை சூடுபடுத்திக்கொள்க. கடாய் சூடானதும் உருட்டிய பரோட்டாவை கடாயில் வைத்து திருப்பிப்போட்டு வேகவைக்கவும். மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு உடனே திருப்பிப்போட்டு அடுத்த பக்கத்தையும் வேகவைக்கவும். கொஞ்சம் எண்ணெய் உற்றி சமைக்கவும்.
  7. அடித்து வைத்துள்ள முட்டையை பரோட்டாவில் ஊற்றி கரண்டியால் மெதுவாக பரப்பவும். முட்டையை 2-3 நிமிடங்கள் வேகவைத்து மேலும் 1-2 நிமிடங்கள் திருப்பிப்போட்டு முட்டை வேகும்வரை வேகவைக்கவும்.
  8. ஒரு முட்டை பரோட்டாவை ஒரு பட்டர் பேப்பர் மீது வைத்து, நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சாஸ், பச்சை மிளகாய் சாஸ் ஆகியவற்றை பரப்பவும். பரோட்டாவின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு தெளித்துக்கொள்ளவும்.
  9. பட்டர் பேப்பரோடு சுருட்டி அடிப்பாகத்தை நேர்த்தியாக மடித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்