வீடு / சமையல் குறிப்பு / முகலாய பரோட்டா

Photo of Mughlai Paratha by Souvik Mukherjee at BetterButter
3215
395
4.8(0)
1

முகலாய பரோட்டா

Feb-28-2016
Souvik Mukherjee
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாவுக்கு:
  2. மைதா (அனைத்துக்குமான மாவு) 3 கப்
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. ரீபைண்டு எண்ணெய் 3 தேக்கரண்டி
  5. வெதுவெதுப்பான தண்ணீர் (மிருதுவான மாவாகப் பிசைவதற்குத் தேவையானது)
  6. பரோட்டாவுக்கு:
  7. பொரிப்பதற்கு எண்ணெய்
  8. முட்டைகள் 4
  9. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  10. நறுக்கிய பச்சை மிளகாய் 2
  11. கீமா பூரணத்திற்கு:
  12. மசித்த மட்டன் 250 கிராம்
  13. வெங்காயம் 1 பெரியது (துண்டுகளாக நறுக்கியது)
  14. பச்சை மிளகாய் 1
  15. இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  16. சீரகத் தூள் 1/2 தேக்கரண்டி
  17. மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
  18. பூண்டு பற்கள் 3-4 (மசித்தது)
  19. கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
  20. மஞ்சள் தூள் 1/8 தேக்கரண்டி
  21. சுவைக்கேற்ற உப்பு
  22. நறுக்கிய கொத்துமல்லி இலைகள் 1/8 கப்
  23. சிவப்பு மிளகாய்த் தூள் 1/4 தேக்கரண்டி
  24. ரீபைண்டு எண்ணெய் 3 தேக்கரண்டி
  25. உலர் உருளைக்கிழங்கு சப்ஜிக்கு:
  26. 4 உருளைக்கிழங்குகள் (பெரியது)
  27. பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கியது)
  28. இஞ்சி விழுது 1 தேக்கரண்டி
  29. கருமிளகுத் தூள் 1/2 தேக்கரண்டி
  30. சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  31. சீரகத் தூள் 1 தேக்கரண்டி
  32. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  33. சுவைக்கேற்ற உப்பு
  34. ரீபைண்டு எண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாவுக்கு:
  2. மைதா, உப்பு எண்ணெய் ஆகியவற்றை பிரெட் தூள் போல் இருக்கும்படி கலந்துகொள்ளவும். இப்போது வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாக பிசைந்துகொள்க.
  3. ஒரு ஈரத்துணியால் மூடி எடுத்துவைக்கவும்.
  4. கீமா பூரணத்திற்கு:
  5. ஒரு வானலியில் எண்ணெய் எடுத்து வெங்காயத்தை மிருதுவாக வதக்கிக்கொள்க. இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  6. நறுக்கிய பச்சை மிளகாயையும் மசாலாக்களையும் சேர்த்து மசாலா வேகும்வரை வறுக்கவும்.
  7. மசித்த மட்டனைச் சேர்த்து (அல்லது கீமா) சிறு தீயில் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  8. கொத்துமல்லி இலைகள் மசித்த பூண்டு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. மேலும் 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
  9. கீமாவுக்காக எடுத்து வைத்து ஆறவிடவும்.
  10. உலர் உருளைக்கிழங்கு சப்ஜிக்கு:
  11. உருளைக்கிழங்கின் தோல் உரித்து சதுரமாக வெட்டிக்கொள்க.
  12. இப்போது ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி உருளைக்கிழங்கு பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்க.
  13. இஞ்சி விழுது, பச்சை மிளகாய், சீரகத்தூள், சிவப்பு மிளகாய்த் தூள். கருமிளகுத் தூள், உப்பு சேர்த்து மசாலாக்கள் வேகும்வரை கலக்கவும்.
  14. இப்போது போதுமானத் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை மூடி சிறுதீயில் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  15. கூடுதல் தண்ணீரை நீக்கி உலர் சப்ஜியை தயாரிக்கவும்.
  16. பரோட்டாவுக்கு:
  17. மாவிலிருந்து 8 சமமான உருண்டைகளைப் பிடித்துக்கொள்க.
  18. சப்பாத்தி உருளையால் சப்பாத்தியைத் தயாரித்துக்கொள்க.
  19. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உப்பு சேர்த்து முட்டைகளை அடித்துக்கொள்க.
  20. 1 தேக்கரண்டி முட்டைக் கலவையை உருட்டிய சப்பாத்தியில் சேர்க்கவும்.
  21. சப்பாத்தியின் மையத்தில் 1 தேக்கரண்டி கீமாவை சதுர வடிவில் பரப்பவும்.
  22. கீமாவில் 2 தேக்கரண்டி முட்டைக் கலவையைப் பரப்பவும். நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயைத் தூவவும்.
  23. இப்போது செங்குத்து பக்கங்களில் இருந்து கடுதாசி போல் மூடி, கிடைமட்டப் பக்கங்களை பார்சல் போல் செய்துகொள்ளவும்.
  24. ஒரு கடாயில் எண்ணெயை பொரிப்பதற்காகச் சூடுபடுத்திக்கொள்க. சூடானதும் தீயை அடக்கவும். பார்சலின் ஒரு பக்கம் வெந்ததும் அடுத்தப் பக்கத்தைத் திருப்பி வறுத்துக்கொள்க. (தோராயமாக 3-4 நிமிடங்கள்). பேப்பர் டவலில் அதிகப்படியான எண்ணெயை வடிக்கட்டிக்கொள்ளவும்.
  25. இதே முறையை மீதமுள்ள மாவுக்கும் செய்யவும்.
  26. உலர் உருளைக்கிழங்கு சப்ஜியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்