வீடு / சமையல் குறிப்பு / முந்திரி கோழி குருமா

Photo of Cashew Chicken Korma by Sarenya Dhevi at BetterButter
3322
18
4.8(0)
0

முந்திரி கோழி குருமா

Mar-05-2016
Sarenya Dhevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • க்ளூட்டன் ஃப்ரீ
  • மெயின் டிஷ்
  • பிரெஷர் குக்
  • தமிழ்நாடு
  • டின்னெர் பார்ட்டி
  • ஈஸி
  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி 250 கிராம்
  2. நறுக்கப்பட்ட வெங்காயம் 2
  3. நறுக்கப்பட்ட தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 2 பிளந்தது
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  8. மல்லித் தூள் 2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  10. ஏலக்காய், இலவங்கப்பட்டை கிராம்பு ஒவ்வொன்றிலும் 1
  11. தேங்காய் பால் 1/2 கப்
  12. முந்திரி பருப்பு 6-7
  13. கசகசா 1 தேக்கரண்டி
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. அலங்காரத்திற்காக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. கசகசா, முந்திரிபருப்புடன் சற்றே சூடாக உள்ள பாலைச் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும். அதன்பிறகு நறுக்கப்பட்ட வெங்காயம், பிளந்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாடை போனதும் நறுக்கப்பட்ட தக்காளி, கோழி மற்றும அனைத்து மசாலாத் தூளையும் சேர்க்கவும்.
  4. நன்றாகக் கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து மூடி 4 விசில்களுக்கு வேகவைத்து தீயை அணைக்கவும்.
  5. விசில் வந்ததும் அரைத்த சாந்து, தேங்காய் பால் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  6. நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்