Photo of Tawa Pulao by Yasmin Shabira at BetterButter
524
3
0.0(0)
0

தவா புலாவ்

Feb-27-2018
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தவா புலாவ் செய்முறை பற்றி

மிகவும் ஈசியாக செய்யக்கூடிய சுவையான புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் - 3 கப்
  2. வெங்காயம் - 2 பெரியது
  3. தக்காளி - 1/2
  4. பச்சை மிளகாய் - 1
  5. கேரட் - 1
  6. பச்சை பட்டாணி - 1/2 கப்
  7. க்ராம்பு - 1
  8. பட்டை - ஒரு சிறு துண்டு
  9. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
  10. டொமேடோ கெட்சப் - 1 மேசைக்கரண்டி
  11. முட்டை - 1
  12. எண்ணெய் - 2மேசைக்கரண்டி
  13. உப்பு - 1 தேக்கரண்டி (தேவையான அளவு)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, க்ராம்பு சேர்க்கவும்...
  2. பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்... வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு மிகவும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்...
  3. தக்காளி நன்றாக மசிந்த பிறகு மிளகாய் தூள் உப்பு மற்றும் டொமேடோ கெட்சப் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் சிம்மில் வைக்கவும்...
  4. டொமேடோ கெட்சப்பிலும் உப்பு இருப்பதால் கொஞ்சமாக உப்பு சேர்க்கவும்... தேவையெனில் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்... பிறகு அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் கேரட் சேர்க்கவும்...
  5. கலவை நன்றாக வெந்து ஒன்று சேர்ந்த பிறகு சாதத்தை அதில் கொட்டி கிளறவும்.... நன்றாக கிளறி மேலும் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு சிம்மில் வைக்கவும்.... அடிப்பிடித்திடாமல் பார்த்துக்கொள்ளவும்....
  6. கடைசியாக வேறு ஒரு கடாயில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி அதில் சேர்க்கவும்...
  7. மிகவும் சுவையான ஈசியாக செய்ய கூடிய தவா புலாவ் ரெடி..... குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் காலியாக வேண்டும் என்ற ஆசையா? இதை செய்து பாருங்க!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்