வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மால்வாணி

Photo of Chicken Malvani by Moumita Malla at BetterButter
2115
105
4.4(0)
0

சிக்கன் மால்வாணி

Mar-13-2016
Moumita Malla
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மற்றவர்கள்
  • ஈத்
  • மகாராஷ்டிரம்
  • கோவா
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத
  • டயாபடீஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோழி (நடுத்தரமாக வெட்டப்பட்ட துண்டுகள்)-500 கிராம்
  2. சுவைக்கேற்ப உப்பு
  3. இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
  4. பூண்டு விழுது-3 தேக்கரண்டி
  5. சீரகம்-1 டீக்கரண்டி
  6. கிராம்பு-5
  7. பச்சை ஏலக்காய் -4
  8. கருப்பு ஏலக்காய் -2
  9. கருப்பு மிளகு -5
  10. கசகசா -1 டீக்கரண்டி
  11. உலர்ந்த தேங்காய்-1/4 கப்(உலர்ந்த தேங்காய் இல்லையென்றால் புதிய தேங்காயையும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
  12. உலர்ந்த சிகப்பு மிளகாய் -5 உடைத்தது
  13. கொத்தமல்லி விதை-2 டீக்கரண்டி
  14. எண்ணெய்-1/4 கப்
  15. வெட்டப்பட்ட வெங்காயம் -2
  16. மஞ்சள் தூள்-1/2 டீக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோழியுடன் உப்பு, இஞ்சி விழுது, பூண்டு விழுது, 2 டீக்கரண்டி எண்ணெய்யையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவும்.
  2. சீரகம், கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கருப்பு மிளகு, கசகசா, உலர்ந்த தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகியவற்றை மணம் வரும் வரை வறுக்கவும். இவற்றை சூடு ஆறியவுடன் நன்கு பொடி போன்று அரைத்துக் கொள்ளவும்.
  3. கனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய்யை சூடேற்றவும். அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  4. பின் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. ஊறவைத்து இருந்த கோழியை சேர்த்துக் கொண்டு தயார்செய்த மசாலாவையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இதனை எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை வேகவிடவேண்டும்.
  6. 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொண்டு குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் தீயை குறைத்துகொண்டு, கோழி வேகும் வரை சமைக்கவும்.
  7. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்