வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமா

Photo of Oats Vegetable Upma / Oats Upma by Poornima Porchelvan at BetterButter
2642
43
4.0(0)
1

ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமா

Mar-15-2016
Poornima Porchelvan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஓட்ஸ் -1 கப்
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கப்பட்டது)
  4. பச்சை மிளகாய் - 3 (பிளக்கப்பட்டது)
  5. இஞ்சி - 1 இன்ச் துண்டு (துருவப்பட்டது)
  6. கேரட்டு - 1 நடுத்தர அளவிலானது (பொடியாக நறுக்கப்பட்டது)
  7. பச்சைப் பட்டாணி - 1/4 கப்
  8. கொத்துமல்லி இலைகள் - அலங்கரிக்க
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்
  11. சுவையூட்டுவதற்கு:
  12. கடுகு - 3/4 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1தேக்கரண்டி
  14. கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
  15. எண்ணெய் - 1 ல் இருந்து 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயைச் சூடுபடுத்தி ஓட்சைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி 'சுவையூட்டுவதற்கு' கீழ் உள்ள அனைத்து சேர்வைப்பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். பொறிய ஆரம்பித்ததும், நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பளிச்சென ஆகும்வரை வறுக்கவும்.
  3. இப்போது நன்றாக நறுக்கப்பட்ட கேரட்டு, ஊறவைத்தப் பச்சைப் பட்டாணி, உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  4. 1 மற்றும் 1/4 கப் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கடாயை மூடியிட்டு மூடி வேகவைக்கவும். கேரட், பச்சைப்பட்டாணி வெந்ததும், வறுத்த ஓட்சைச் சேர்க்கவும். மீதமுள்ள தண்ணீரோடு நன்றாகக் கலக்கவும்.
  5. தண்ணீர் குறைவாக இருப்பதை உணர்ந்தால், கொஞ்சம் தண்ணீரை தெளித்து வேகவைக்கவும். கடாயை மூடி ஓட்சை நடுத்தர தீயில் தண்ணீர் உறிஞ்சப்படும்வரை விடவும்.
  6. ஓட்ஸ் மென்மையாகி ஊதியபிறகு, அடுப்பை நிறுத்தவும். கொத்துமல்லியுடன் அலங்கரித்து, தேங்காய் சட்டினியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்