வீடு / சமையல் குறிப்பு / ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங்

Photo of Shahi Tukda/Shahi Tukra - Royal Bread Pudding by Priya Suresh at BetterButter
1600
211
4.8(0)
0

ஷாகி தட்கா/துக்ரா - ராயல்பிரெட் புட்டிங்

Mar-18-2016
Priya Suresh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • வெஜ்
  • மீடியம்
  • முகலாய்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 5 பிரெட் துண்டுகள்
  2. 1/2 கப் நெய் (பொரிப்பதற்கு)
  3. சர்க்கரை பாகு:
  4. 1/3 கப் தண்ணீர்
  5. 1/3 கப் சர்க்கரை
  6. 2 ஏலக்காய் (நசுக்கியது)
  7. கொஞ்சம் குங்குமப்பூத் தாள்கள்
  8. ராப்ரி/ராப்டிக்கு:
  9. 3 கப் முழு பால்
  10. 2 தேக்கரண்டி சர்க்கரை
  11. 2 ஏலக்காய் (நசுக்கியது)
  12. நறுக்கிய பருப்புக் கலவை (பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்பு)

வழிமுறைகள்

  1. தண்ணீரையும் சர்க்கரையையும் கடாயில் சூடுபடுத்தி குங்குமப்பூத் தாள்களை தண்ணீர் கொதிக்கும்போது போடவும். சர்க்கரைப் பாகு சற்றே அடர்த்தியானதும், அடுப்பை நிறுத்தி, எடுத்து வைக்கவும்.
  2. இன்னொரு கடாயில், பாலை மிதமானச் சூட்டில் பால் 1/4 பங்காக அதன் அசல் அளவில் இருந்து குறையும்போது கொதிக்கவைக்கவும்.
  3. தொடர்ந்து கலக்க மறக்கவேண்டாம், பால் குறைந்ததும், ஏலக்காய்த் தூள், சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தோடர்ந்து கலக்கிக்கொண்டே சூடுபடுத்துவதை மேலும் 5 நிமிடங்கள் தொடரவும்.
  4. அடுப்பிலிருந்து இறக்கி எடுத்து வைக்கவும். இப்போது பிரெட் துண்டுகளை எடுத்து பக்கங்களை வெட்டி முக்கோணமாக வெட்டிக்கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்தி பிரட்டின் பக்கங்கள் மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் பொரிக்கவும். பிரெட் துண்டுகள் வறுக்கப்பட்டதும், ஒவ்வொரு துண்டையும் சர்க்கரைப் பாகில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் ஊறவைக்கவும்.
  6. பரிமாறும் தட்டில் அடுக்கி, ராப்ரியை பிரட் துண்டுகளின் மீது உற்றி, நறுக்கிய பருப்புகளால் அலங்கறிக்கவும். சூடாகவே சில்லென்றோ பரிமாறவும், சில்லென்று பரிமாறினால் எனக்குப் பிடிக்கும் என்றாலும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்