வீடு / சமையல் குறிப்பு / அரைக்கீரை மாங்காய் பச்சடி

Photo of Araikeerai(Amaranthus Dubius) Mango Pachadi by Ayesha Ziana at BetterButter
1437
3
0.0(0)
0

அரைக்கீரை மாங்காய் பச்சடி

Mar-22-2018
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைக்கீரை மாங்காய் பச்சடி செய்முறை பற்றி

அரைக்கீரை, மாங்காய், எள் மற்றும் சிலவற்றைச் சேர்த்து செய்த பச்சடி. சாதம், புலாவ், இட்லி, தோசை எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை 1 1/4 கப் பொடியாக நறுக்கியது
  2. மாங்காய் 1/2 கப் பொடியாக நறுக்கியது
  3. இஞ்சி சிறு துண்டு பொடியாக நறுக்கியது
  4. எள் 3/4 முதல் 1 ஸ்பூன்
  5. காரம் குறைவான பச்சை மிளகாய் 2 அல்லது தேவைக்கேற்ப
  6. பூண்டு 5 பல்
  7. உப்பு தேவைக்கு
  8. தாளிக்க: எண்ணெய் தேவைக்கு
  9. கடுகு 1/2 ஸ்பூன்
  10. சீரகம் 1/2 ஸ்பூன்
  11. காய்ந்த மிளகாய் 2

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் எள்ளை வறுத்து எடுக்கவும்.
  2. அதே வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  3. மிக்ஸியில் கீரை கலவை, வறுத்த எள், உப்பு, இவற்றுடன் மாங்காய் துண்டுகளையும் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  4. வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வைத்துத் தாளித்து, அரைத்த பச்சடியின் மேல் கொட்டி, கலந்து கொள்ளவும்..
  5. சூப்பர் சுவையுடன் அரைக்கீரை மாங்காய் பச்சடி தயார். இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். டிபன்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்