வீடு / சமையல் குறிப்பு / உளுந்து முறுமுறுப்பான கச்சோரி

Photo of Urad dal ki khasta kachori by Anjana Chaturvedi at BetterButter
5225
519
4.2(0)
0

உளுந்து முறுமுறுப்பான கச்சோரி

Jul-31-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
15 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 15

  1. ரீபைண்டு மாவு/மைதா - 250 கிராம்
  2. ரவை - 2 தேக்கரண்டி
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. சமையல் எண்ணெய் - 50 மிலி
  5. பூரணத்திற்கு: உளுந்து (வெள்ளை) - 1/2 கப்
  6. பெருஞ்சீரகம் நசுக்கியது - 2 தேக்கரண்டி
  7. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் - 2
  9. இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி
  10. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  12. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
  13. சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
  14. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ரீபைண்டு மாவையும் ரவையையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்க. உப்பு ரீபைண்டு எண்ணெய் சேர்க்கவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் கலந்துகொள்க. மென்மையான மாவைத் தயாரிக்கப் போதுமான தண்ணீரை ஊற்றி எடுத்து வைக்கவும். உளுந்தைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின்னர் வடிக்கட்டி நன்றாகக் கழுவிக்கவும்.
  2. உளுந்து, பெருஞ்சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியை கரடுமுரடாக ஒரு மிக்சியில் அரைத்துக்கொள்க. இந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு சிவப்பு மிளகாய்த் தூள், மல்லித்தூள், பெருங்காயம், 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. சமையல் சோடா மாவை இந்தக் கலவையோடு கச்சோரி செய்வதற்கு முன் சேர்க்கவும். ஒரு சிறிய வாதுமை அளவு உருண்டையை மாவில் எடுத்து, தட்டி, 1 தேக்கரண்டி கலவையை அதில் வைத்து முனைகளை மடித்து ஒரு மொத்தமான கச்சோரியாக உருட்டிக்கொள்ளவும்.
  4. ஒரு வானலியைச் சூடுபடுத்திக்கொள்க. அதன்பின்னர் கச்சோரியை எண்ணெயில் விட்டு மிதமானச் சூட்டில் திருப்பிப்போடுக. அவ்வப்போது கச்சோரிகளைத் திருப்பிப்போடவும், அப்போதுதான் இரண்டு பக்கமும் நன்றாக வேகும்.
  5. இரண்டு பக்கமும் பொன்னிறமாக, முறுமுறுப்பாக மாறும் வரையிலும் கச்சோரி முழுமையாக உப்பும் வரையும் வறுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்