வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ புளி மிளகாய் குழம்பு

Photo of Mango tamrind kuhambu by kamala shankari at BetterButter
342
5
0.0(0)
0

மாம்பழ புளி மிளகாய் குழம்பு

Mar-25-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ புளி மிளகாய் குழம்பு செய்முறை பற்றி

மாம்பழத்தின் மணமும் சுவையும் குழம்பில் சேர்த்து அலாதியான ருசியை கொடுக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பழுத்த மாம்பழம் 1
  2. புளி எலுமிச்சை அளவு
  3. சின்ன வெங்காயம் 1/2 கப்
  4. மிளகாய் தூள் 3 தேக்கரண்டி
  5. தக்காளி 4
  6. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. தாளிக்க:
  10. கடுகு 1/2 தேக்கரண்டி
  11. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை சிறிது
  13. வறுத்து பொடிக்க:
  14. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  15. சீரகம் 1/2 தேக்கரண்டி
  16. பச்சரிசி 1 தேக்கரண்டி
  17. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் தோலுரித்து இரண்டாக நறுக்கவும்
  2. புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்பு மஞ்சள் தூள் தக்காளி சேர்த்து கரைக்கவும்
  3. மாம்பழம் தோல்நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்
  5. இது நன்கு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. வதங்கியதும் புளி கரைசல் மாம்பழம் சேர்த்து கொதிக்க விடவும்
  7. கொதித்ததும் பொடித்த பொடியை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்