வீடு / சமையல் குறிப்பு / பச்சைத் திராட்சை & எலுமிச்சை ரசம்

Photo of Green Grapes & Lemon Rasam by Priya Suresh at BetterButter
1906
36
0.0(0)
0

பச்சைத் திராட்சை & எலுமிச்சை ரசம்

Jul-31-2015
Priya Suresh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/4 கப் - வேகவைக்கப்பட்ட துவரம் பருப்பு
  2. 1/2 கப் - பச்சை திராட்சை (விதை எடுக்கப்பட்டு துண்டாக்கப்பட்டது)
  3. 2 - தக்காளி (சிறியது & பழுத்தது)
  4. 1 தேக்கரண்டி - ரசப்பொடி
  5. 2 துண்டு - பூண்டு (நசுக்கப்பட்டது)
  6. 1 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
  7. 2 - கிராம்பு
  8. 2- பே இலைகள்
  9. 1/4 தேக்கரண்டி - பெருங்காயத் தூள்
  10. 2 துண்டு - பச்சை மிளகாய் (பிளக்கப்பட்டது)
  11. கொஞ்சம் கரிவேப்பிலை
  12. நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
  13. 1 தேக்கரண்டி - எண்ணெய்
  14. சுவைக்கு உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளியைக் கழுவி நன்றாக நசுக்கிக்கொள்ளவும்.
  2. இப்போது வேகவைத்த துவரம்பருப்பு, நசுக்கப்பட்ட பூண்டு பற்கள், ரசப்பொடி, உப்பு ஆகிய சேர்வைப்பொருள்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் தண்ணீர்விட்டு கலக்கிக்கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வானலியை எடுத்து எண்ணெயை சூடாக்கிக்கொள்க. பே இலைகள், கிராம்பு போட்டு பழுப்பு நிறம் வரும்வரை வறுக்கவும்.
  4. பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிங்களுக்கு வதக்கவும்.
  5. பின்வரும் சேர்வைப்பொருள்களை இவற்றோடு சேர்க்கவும்: கரிவேப்பிலை, கனசதுரமாக வெட்டப்பட்ட பச்சைத் திராட்சையை மீண்டும் சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. இறுதியாக நசுக்கப்பட்ட தக்காளியையும் பருப்பு தண்ணீர் கலவையையும் போடவும். நன்றாகக் கொதிக்கட்டும்.
  7. கொதித்ததும், தீயை நிறுத்திவிட்டு எலுமிச்சை சாறையும் நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
  8. உடனே சூடாக சாதத்துடன் பரிமாறி அதை அனுபவிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்