Photo of Poha kali by Krishnasamy Vidya Valli at BetterButter
533
2
0.0(0)
0

அவல் களி

Mar-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

அவல் களி செய்முறை பற்றி

எல்லாரும் திருவாதிரை களி உளுந்தங்களி கேப்பக்களி வெந்தயகளி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவல் களி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நெல்லையில் சித்திரை ஒன்றாம் நாள் கண்டிப்பாக செய்வார்கள். மற்ற களிபோல் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பல்லிற்கு வேலை கொடுக்கும். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் டைமில் கொடுக்கப்படும் ஆரோக்கியமான உணவு இது. அந்த ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அவல் -1/4 கப்
  2. வெல்லம் -1/8 கப் (பொடியாக தட்டிக்கொள்ளவும்)
  3. தேங்காய் பல் கீறியது -1 மேஜைக்கரண்டி
  4. எள்ளு -1 தேக்கரண்டி
  5. பாசிப்பருப்பு -1 தேக்கரண்டி
  6. நெய் -1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  7. ஏலப்பொடி -2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பாசிப்பருப்பை வறுக்கவும்
  2. தனியாக எடுத்து விட்டு எள்ளை வறுக்கவும்
  3. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  5. அவலை தண்ணீர் விட்டு களைந்து வைக்கவும். கெட்டி அவல் என்றால் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அவல் குழைய கூடாது . களி செய்தபின் கடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
  6. வெல்லகரைசலில் அவலை சேர்த்து கிளறவும்
  7. வறுத்த எள்ளு பாசிப்பருப்பு மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்
  8. தேங்காய் பல்கீறியதை சேர்த்து நன்றாக கிளறவும்
  9. நெய்( விருப்பப்பட்டால்) சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்