வீடு / சமையல் குறிப்பு / தால் தோக்லி

Photo of Dal Dhokli by Disha Khurana at BetterButter
5042
439
4.7(1)
0

தால் தோக்லி

Apr-03-2016
Disha Khurana
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோக்லி செய்ய
  2. கோதுமை மாவு- 1/2 கப்
  3. மஞ்சள்தூள்- 1/4 டீக்கரண்டி
  4. பெருங்காயம்- 1 சிறிது அதிகமாக
  5. சுவைகேற்ப உப்பு
  6. தால் செய்வதற்கு:
  7. துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி
  8. 2 தக்காளி (நன்றாக வெட்டியது)
  9. பச்சைமிளகாய்- 2-3
  10. உலர்ந்த காஷ்மீர் சிகப்பு மிளகாய்- 2-3
  11. புளி (உலர்ந்தது)- 2 தேக்கரண்டி
  12. வெல்லம் - 1 தேக்கரண்டி
  13. கடுகு- 1/2 டீக்கரண்டி
  14. சீரகம் - 1/2 டீக்கரண்டி
  15. மஞ்சள்தூள்- 1 டீக்கரண்டி
  16. கருவேப்பிலை 7-8
  17. காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள்- 1 டீக்கரண்டி
  18. எண்ணெய்- 2 தேக்கரண்டி
  19. சுவைக்கேற்ப உப்பு
  20. ஒரு கையளவு வேர்கடலை
  21. கொத்தமல்லி இலை (நன்றாக வெட்டியது) - 2-3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தோக்லிக்கு தேவையான பொருள் அனைத்தையும் கலந்து முடிந்த வரை குறைந்த தண்ணீரில் கெட்டியாக பிணைந்துக் கொள்ளவும். அதை 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும்.
  2. புலியை சுடுதண்ணீரீல் 15 நிமிடம் ஊறவைக்கவும், பின் கைகளால் பிசைந்து புளிக்கரைசல் தயார் செய்யவும். பின்னர் அதை பிழிந்து வடிக்கட்டி கொள்ளவும்.
  3. பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழிந்த பின் பருப்பை வடிக்கட்டிக் கொள்ளவும்.
  4. துவரம்பருப்புடன் பச்சைமிளகாய், 1 வெட்டப்பட்ட தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
  5. அதில் நிராவி இல்லாத அளவிற்கு சாதாரண வெப்ப நிலைக்கு வரவிடவும். பருப்பை மென்மையாக மசிப்பான் கொண்டு மசித்துக் கொள்ளவும்.
  6. அதில் 1 நன்றாக வெட்டப்பட்ட தக்காளி, புளிக்கரைசல், வெட்டப்பட்ட வெல்லம், கையளவு வேர்கடலை, 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும். அதை குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.
  7. இதற்கிடையில் தயார் செய்து வைத்த தோக்லி மாவை ரொட்டியைப் போல தேய்த்து, நடுத்தர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தோக்லி துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து 6-7 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
  8. ஒரு சிறு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்து அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, உலர்ந்த காஷ்மீர் மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
  9. இந்த தடுக்காவை உடனடியாக பருப்பில் போட்டு நறுமணம் வெளியே செல்லாமல் குக்கரை மூடவும்.
  10. அலங்காரத்துக்காக கொத்தமல்லி இலையை சேர்த்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Feb-20-2019
Maritta Felix   Feb-20-2019

Tasty dish

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்