வீடு / சமையல் குறிப்பு / முட்டை கொத்து பரோட்டா

Photo of Egg kothu parata by Bena Aafra at BetterButter
571
10
0.0(0)
0

முட்டை கொத்து பரோட்டா

Apr-02-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை கொத்து பரோட்டா செய்முறை பற்றி

முட்டை கொத்து பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை-2
  2. பரோட்டா -4
  3. வெங்காயம் -2 (பொடியாக நறுக்கியது )
  4. பச்சை மிளகாய் -3
  5. கறிவேப்பிலை -சிறிதளவு
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. தக்காளி -1 (பொடியாக நறுக்கியது )
  9. கொத்தமல்லித்தழை
  10. பரோட்டா குழம்பு
  11. மஞ்சள் தூள்
  12. மிளகாய் தூள்
  13. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. பரோட்டாவை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  5. நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
  6. சின்ன சின்னதாக நறுக்கி வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கிளறவும்.
  7. பிறகு பரோட்டா சால்னாவை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
  8. கொத்தமல்லி இழை தூவி இறக்கவும்.
  9. சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி. ...
  10. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்