வீடு / சமையல் குறிப்பு / ப்ளூ க்ரூவுட் ஹெல்த்தி தோசை

Photo of Blue kraut healthy dosa by Adaikkammai Annamalai at BetterButter
943
9
0.0(0)
0

ப்ளூ க்ரூவுட் ஹெல்த்தி தோசை

Apr-02-2018
Adaikkammai Annamalai
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ப்ளூ க்ரூவுட் ஹெல்த்தி தோசை செய்முறை பற்றி

சில பேர்களுக்கு இந்த முட்டைகோஸ் பிடிக்காது எனவே இதை தெரியாமல் அரைத்து தோசை அல்லது இட்லி மாவுடன் சேர்த்து அரைத்து விட்டால் கொஞ்ச கூட பச்சை வாடை தெரியாது ,, குழந்தைகளுக்கு பிடிக்கும் மிகவும் சத்தானது, பர்பில் நிறம் அனைவரையும் ஈர்க்ககூடியது ,எனவே இதை செய்து உங்கள் குழந்தைகளுக்கு குடுங்கள் மிகவும் சத்து, விரும்பியும் சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி - அரை உளக்கு
  2. பச்சரிசி - அரை உளக்கு
  3. உளுந்து - 25 gm(ஒரு கை அளவு )
  4. உப்பு - தேவையான அளவு
  5. ப்ளூ க்ரூவுட் முட்டைகோஸ் - அரை பூ

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருளை எடுத்து கொள்ளவும்
  2. பின் இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து மூன்றையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் மேல் ஊற வைக்கவும்
  3. 2 மணி நேரம் பின் எடுத்து ஊறவைத்த அரிசியை அலசவும் 3 , 4 முறை, பின் ப்ளூ க்ரூவுட் முட்டைகோசை நாளாக நருக்கி எடுத்து முதலில் அரைக்கவும்
  4. நன்றாக வலுவலுவென்று அரைத்து எடுத்து, ஊறவைத்து அலசி எடுத்த அரிசியை சேர்க்கவும்
  5. அனைத்து அரிசியையும் சேர்த்து அரைக்கவும்
  6. நன்றாக அரைத்த பின் உப்பு சேர்த்து அரைக்கவும்
  7. பின் அதை மிக்ஸ்யிலிருந்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
  8. இரவு முலுவதும் அல்லது 8 மணி நேரம், மாவை உறவு சேர்க் வைக்கக்வும்,,
  9. பின் காலையில் எடுத்து பார்க்கவும், மாவு புளித்து உப்பி வந்துருக்கும்,,இதே போல்
  10. பின் குண்டு கரண்டியை வைத்து நன்றாக கலக்கி தோசை ஊற்ற தயராகவும்,
  11. பின் தோசை கல் எடுத்து தோசை உத்தப்பம் வேணும் என்றால் ஊற்றலாம் அல்லது மெல்லிசாக ஊற்றலாம்
  12. தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும்,,நல்லெண்ணெய் சேர்ப்பது நல்லது,,,
  13. பின் தோசையை திருப்பி போட்டு எடுக்கவும்
  14. சுவையான, கொஞ்சம் கூட முட்டைக்கோஸ் பச்சை வாடை தெரியாத சுவையான ப்ளூ க்ருவுட் தோசை தயார்,, என் மகளுக்கு பிடித்தமான கலர் எனவே விரும்பி சாப்பிடுவால்,,,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்