வீடு / சமையல் குறிப்பு / மீன் பிரியாணி

Photo of Fish Biryani by Bhavna Kalra at BetterButter
3577
203
4.2(0)
0

மீன் பிரியாணி

Jul-31-2015
Bhavna Kalra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • இந்திய
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 1/2 கப் பாஸ்மதி அரிசி
  2. 2 பிரிஞ்சி இலை
  3. 2 பச்சை ஏலக்காய்
  4. 2 கிராம்பு
  5. 1 தேக்கரண்டி ஷாகி சீரகம்
  6. 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  7. 200 கிராம் இறால்
  8. 2 வெள்ளை மீன் துண்டு ஏதாவது
  9. 1 தேக்கரண்டி ரவை
  10. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  12. அரை எலுமிச்சை பழத்தின் சாறு
  13. மீனை பொரிப்பதற்கு சமையல் எண்ணெய்
  14. 2 பெரிய பழுத்த தக்காளி நறுக்கப்பட்டது
  15. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  16. 2-3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
  17. 1 தேக்கரண்டி புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  18. 1 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  19. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  20. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  21. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  22. 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  23. 1 பிரிஞ்சி இலை
  24. 1/3 கப் பால்
  25. கொஞ்சம் குங்கும்ப்பூத் தாள்
  26. 1 எலுமிச்சை பழத்தின் சாறு
  27. புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  28. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியைத் தண்ணீர் விட்டுக் கழுவி அனைத்துச் சேர்வைப்பொருள்களோடும் 2 கப் தண்ணீரோடும் வேகவைக்கவும். அரிசி அரைவேக்காட்டில் வேகவைக்கப்படவேண்டும்.
  2. மீனோடு பின்னர் சமைக்க இருப்பதால் அதை எடுத்து வைக்கவும்.
  3. கடிக்கும் அளவில் மீன் துண்டுகளை வெட்டிக்கொள்ளவும். மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள், உப்பு, எலுமிச்சை ஆகியவற்றை மீனின் மீது தடவி 15 நிமிடங்கள் மேரினேட் ஆக விட்டுவைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். ரவையை ஒரு தட்டில் அல்லது சமையல் துண்டில் ஊற்றி மேரினேட் செய்த மீனின் அனைத்துப் பக்கங்களிலும் தடவவும்.
  5. பொன்னிறமாகி அனைத்துப் பக்கங்களும் வேகும்வரை மீனை பொரிக்கவும், வழக்கமாக ஒரு பக்கத்திற்கு 3-4 நிமிடங்கள்
  6. சமையல் துண்டில் வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  7. பிரியாணியை வைக்கப்போகும் கனமான அடிப்பாகமுள்ள ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  8. சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து சில நொடிகள் வேகவைக்கவும்.
  9. வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வதக்கவும். இப்போது தக்காளி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கூழாகும்வரை வேகவைத்து புத்தம் புதிய கொத்துமல்லியைச் சேர்க்கவும்.
  10. 1 கப் சூடானத் தண்ணீர் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும். தீயை அடக்கி கலவையில் மெதுவாக மீன் துண்டுகளை வைக்கவும். அரைவேக்காட்டு அரிசியை மெதுவாக அதன் மீது வைக்கவும்.
  11. பாலைச் சூடுபடுத்தி குங்குமப்பூவை அதனோடு சேர்த்து 10 நிமிடங்களுக்கு விட்டுவைக்கவும்.
  12. மீன் மீது சாதத்தை அடுக்கியபின், சாதத்தை குங்குமப்பூபாலால் அலங்கரிக்கவும்.
  13. இடைப்பட்ட இடைவெளியில் எலுமிச்சைச் சாறைச் சேர்த்து, மூடி, சிறு தீயில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  14. புத்தம்புதிய கொத்துமல்லி எலுமிச்சைத் துண்டுகளால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்