வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானிய கொய்யா கச்சோரி

Photo of RAJASTHANI MAWA KACHORI by Shaheen Ali at BetterButter
1582
115
4.3(0)
0

ராஜஸ்தானிய கொய்யா கச்சோரி

Apr-13-2016
Shaheen Ali
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • மீடியம்
  • ராஜஸ்தான்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா - 400 கிராம்
  2. நெய் - 2 1/2 தேக்கரண்டி
  3. வெதுவெதுப்பானத தண்ணீர் - 1 கப் பிசைவதற்கு
  4. பூரணத்திற்கு:
  5. கொய்யா - 250 கிராம்
  6. தேங்காய் - 1 கப் துருவியது
  7. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  8. ரவை - 1/3 கப் (விருப்பம்)
  9. உலர் திராட்சை - 1/2 கப் சர்க்கரை - 3/4 கப் (தேவையான அளவு)
  10. முந்திரி பருப்பு - 1/2 கப் நறுக்கியது
  11. சாரா பருப்பு (சிரோன்ஜி) - 2 தேக்கரண்டி
  12. பாதாம் - 1/3 கப் நறுக்கியது
  13. சர்க்கரை - 3/4 கப் (தேவையான அளவு)
  14. எண்ணெய் - பொரிப்பதற்கு
  15. பாகிற்காக: (இந்த நிலையில் விருப்பம் சார்ந்தது)
  16. தண்ணீர் - 2 கப்
  17. சர்க்கரை - 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. மாவு எப்படித் தயாரிப்பது - மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்து, அதில் நெய்யைச் சேர்க்கவும். கைகளால் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  2. மாவதை் திடமாகத் தயாரிக்க மெதுவாக வெதுவெதுப்பானத் தண்ணீரைச் சேர்த்து பிசைந்துகொள்ளவும். மாவு இறுக்கமாக இருக்கவேண்டும். மென்மையான மாவு கச்சோரிக்குச் சரிபட்டு வராது.
  3. மாவை ஒரு மஸ்லின் துணியால் மூடி 10-15 நிமிடங்கள் வைக்கவும்.
  4. மாவா பூரணம் எப்படி தயாரிப்பது - 1 தேக்கரணடி நெய்யை ஒரு வானலியில் சூடுபடுத்திக்கொள்க. பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அதே வானலியில், கொய்யா பொன்னிறமாக வறுத்துக்கொள்க. இதை சிறு தீயில் செய்யவும், இல்லையேல் கொய்யா கருகிவிடும்
  6. தேங்காய்த் துருவலையும் சரக்கரையையும் சேர்த்து எல்லாம் ஒன்றாகும்வரை நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  7. இப்போது வறுத்தப் பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் சேர்த்து வேகமான ஒரு கலக்கு கலக்கி அடுப்பை நிறுத்தவும். எடுத்துவைத்து அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.
  8. எவ்வாறு கொய்யா கச்சோரி தயாரிப்பது - ஒரு எலுமிச்சை அளவு உருண்டையை மாவில் செய்து உள்ளங்கையில் உருட்டு மென்மையான உருண்டைகளைச் செய்துகொள்ளவும்.
  9. சற்றே தட்டி மாவு தெளித்த இடத்தில் வைக்கவும். சிறிய அளவிலான பூரிகளாக உருட்டிக்கொள்க.
  10. பூரியை உங்கள் உள்ளங்கையில் வைத்து ஒரு கரண்டி பூரணத்தை மையத்தில் வைக்கவும்.
  11. பூரியின் அனைத்துப் பக்கங்களையும் சேகரித்து ஒன்றிணைத்து மெதுவாக அழுத்தி கச்சோரியை மூடவும்.
  12. கச்சோரியைத் திருப்பி தட்டையான வடிவத்தில் செய்துகொள்ள சற்றே அழுத்தவும்
  13. ஒரு தட்டில் தனியாக வைத்து அதே போல் மற்ற கச்சோரிகளையும் தயாரித்துக்கொள்ளவும்.
  14. கச்சோரியை எவ்வாறு வறுப்பது - போதுமான எண்ணெ்யை வானலியில் சூடுபடுத்துக. எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய துண்டு மாவை விடவும், அது உடனடியாக உப்பினால் எண்ணெய் தயார் என்று பொருள்.
  15. கவனமாக ஒரு கச்சோரியை போட்டு சிறு தீயில் இரண்டு பக்கங்களையும் வறுக்கவும். இந்த செயல்முறை மிகவும் முக்கியமானது, ஏனெனில் உயர் தீயில் செய்தால் கசசோரி உடனே கருகி, உள்ளிருக்கும் மாவு வேகாமல் இருக்கும். அதனால் எப்போது கச்சோரியை சிறு தீயில் வேகவைக்கவும்.
  16. பொன்னிறமாகும்வரை வறுத்து, அவற்றை ஒரு பேப்பர் துண்டிற்கு மாற்றவும். அப்போதுதான் கூடுதலான எண்ணெயை உறிஞ்சும்.
  17. கச்சோரி முழுமையான ஆறியதும், ஒரு காற்றுப்புகாத ஜாரில் வைத்து ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிடவும். நீண்ட நாட்களுக்குச் சேமிக்கவேண்டும் என்றால், பிரிஜ்ஜில் வைத்து பரிமாறுவதற்கு முன், பிறகு எடுத்து இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டுவரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்