வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி

Photo of Rajasthani Gatte ki Sabji by Shaheen Ali at BetterButter
9067
924
4.6(0)
1

ராஜஸ்தானி கேட்டே கி சப்ஜி

Apr-14-2016
Shaheen Ali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ராஜஸ்தான்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2 நடுத்தர அளவு அரைத்துக்கொள்ளப்பட்டது
  2. கடலை மாவு - 1 1/2 கப்
  3. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
  4. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. தயிர் - 1 கப்
  6. சிவப்பு மிளகாய் - 2, உடைத்தது
  7. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  9. கடுகு - 1/2 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் - 2 பிளக்கப்பட்டது
  11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. சிவப்பு மிளகாய்த் தூள் - 3/4 தேக்கரண்டி
  13. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  14. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  15. உப்பு - தேவையான அளவு
  16. எண்ணெய் - 4-5 தேக்கரண்டி
  17. கொத்துமல்லி - புதியது நறுக்கப்பட்டது அலங்கரிப்பதற்காக
  18. 1 1/2 கப் கடலை மாவு

வழிமுறைகள்

  1. கேட்டேவை எப்படித் தயாரிப்பது: ஒரு பெரியக் கலவைப் பாத்திரத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலர் சேர்வைப்பொருள்களைச் சேர்க்கவும். மெதுவாகத் தண்ணீர் சேர்த்து இறுக்கமான மாவாக பிசைந்துகொள்ளவும். பூரிக்குச் செய்வதுபோல் தயாரித்துக்கொள்ளவும்.
  2. 5 நிமிடத்திற்கு விட்டுவைக்கவும். இதற்கிடையில் ஒரு வானலி நிறையத் தண்ணீரைச் சூடுபடுத்தி கொஞ்சம் உப்பு சில துளிகள் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
  3. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், உருளை ரிப்பன்களைத் தண்ணீரில் விட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும். நுரைவருவதைக் காணலாம், பயப்படவேண்டாம், ஒரு கரண்டியால் நீக்கிவிடவும்.
  4. ரிப்பன்கள் வேக ஆரம்பித்ததும், மேலெழும்பி மிதக்கும். அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு வடிக்கட்டியில் தண்ணீரை வடிக்கட்டி ஆறவிடவும்.
  5. அந்த ரிப்பன்களை ஒரு நறுக்கும் பலகையில் வைத்து சமமானத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  6. குழம்புக்கு: ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சீரகம் சேர்க்கவும். அவை வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
  7. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மல்லித்தூளைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பக்கங்களிலிருந்து எண்ணெய் பிரியும்வரை வறுக்கவும்.
  8. மசாலா தயாரான உடனே, அடித்து வைத்துள்ள தயிரைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சிறிது தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளவும், தேவையானப் பதத்தினைப் பெறுவதற்காக.
  9. கேட்டே துண்டுகளைக் குழம்பிற்குள் போட்டு 5-6 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். சப்ஜியை மூடி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்