Photo of Prawn vada by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
501
7
0.0(3)
0

Prawn vada

Apr-18-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் -200 கிராம்
  2. பொரிகடலை மாவு - 5-6 தேக்கரண்டி
  3. தேங்காய் - 1/4 கப்
  4. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் -3
  6. முட்டை -1
  7. சீரகம் -1/2தேக்கரண்டி
  8. பெருஞ்சீரகம்-1 தேக்கரண்டி
  9. மிளகு -1/4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை -சிறிதளவு
  11. மல்லி இலை - சிறிதளவு
  12. உப்பு -தேவையான அளவு
  13. எண்ணெய் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் இறாலை நன்கு கழுவி மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
  2. பின்பு தேங்காய் துருவல்,சீரகம்,பெருஞ்சீரகம் ,மிளகு சேர்த்து பொடியாக்கி அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  3. இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அரைத்த இறால்,தேங்காய்,வெங்காயம் ,முட்டை,சிறிதளவு கருவேப்பிலை ,மல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் பொரிகடலை மாவு சேர்த்து நன்கு வடை பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும் .
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எண்ணெய்யால் பொரித்து எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான இறால் வடை தயார்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Apr-18-2018
Lalitha Venkat   Apr-18-2018

Yummy

Hameetha Banu
Apr-18-2018
Hameetha Banu   Apr-18-2018

Yumm

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்