வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீர் பன்னீர் சாமன்

Photo of Kashmiri Paneer Chaman by Moumita Malla at BetterButter
9398
165
4.8(0)
0

காஷ்மீர் பன்னீர் சாமன்

Apr-18-2016
Moumita Malla
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • ஜம்மு காஷ்மீர்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் - 250 கிராம்
  2. தக்காளி கூழ் - 1 கப்
  3. காஷ்மீர் சிகப்பு மிளகாய் தூள் - 2 டீக்கரண்டி
  4. பெருங்காயம் - 1 சிட்டிகை
  5. சீரகம் - 1/2 டீக்கரண்டி
  6. பெருஞ்சீரகத் தூள் - 2 டீக்கரண்டி
  7. உலர் இஞ்சி தூள் - 1/2 டீக்கரண்டி
  8. மஞ்சள்தூள் - 1/2 டீக்கரண்டி
  9. கரம் மசாலா - 1 டீக்கரண்டி
  10. நெய் - 1 டீக்கரண்டி
  11. இலவங்க இலை - 1
  12. கருப்பு ஏலக்காய் - 2
  13. பச்சை ஏலக்காய் - 4
  14. இலவங்க பட்டை - 1
  15. எண்ணெய் - 5 தேக்கரண்டி (கடுகு எண்ணெய்க்கு முன்னுரிமை)
  16. தண்ணீர் 1/2 கப்
  17. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பன்னீரை செவ்வக வடிவில் கனமான துண்டுகளாக வெட்டவும்.
  2. 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, பன்னீர் துண்டுகளை இரு புறமும் மேலோட்டமாக லேசான பொன்னிறத்தில் வறுக்கவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. இப்போது பெருங்காயம், கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், இலவங்க இலைகள் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
  4. தக்காளி கூழ், உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், உலர் இஞ்சி தூள் சேர்க்கவும். மசாலா எண்ணெய்யை விட்டுச் பிரியும் வரை கொதிக்க விடுங்கள்.
  5. இப்போது இந்த மசாலாவில் பன்னீர் சேர்க்கவும். சிறிது பெருஞ்சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  6. இப்போது 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  7. நன்றாக கலந்து 2-3 நிமிடம் வேகவிடவும்.
  8. கரம் மசாலாத் தூள் மற்றும் நெய் சேர்த்து மூடிவிடவும். இதை 2 நிமிடம் வேகவிடவும். அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய கொத்தமல்லியைக் கொண்டு அலங்கரிக்கவும்.
  9. சூடான சாதம் அல்லது எதாவதொரு இந்திய பிரட் வகையுடன் உண்டு மகிழலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்