வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Photo of Chattinad Chicken Biryani by Shashikala Teggi at BetterButter
750
31
4.5(0)
0

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Apr-22-2016
Shashikala Teggi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி (சீரக சம்பா) அரிசி 4 கப் (500 கிராம்)
  2. புதினா 1 கப்
  3. கொத்துமல்லி 1 கப்
  4. சிக்கன் 500 கிராம்
  5. தக்காளி 3
  6. வெங்காயம் 2
  7. தயிர் 2 தேக்கரண்டி
  8. சிவப்பு மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் 3 தேக்கரண்டி
  10. சிக்கன் பிரியாணி மசாலா 3 தேக்கரண்டி
  11. இஞ்சி பூண்டு விழுது 3 தேக்கரண்டி
  12. எண்ணெய் 8 தேக்கரண்டி
  13. நெய் 3 தேக்கரண்டி
  14. பச்சை மிளகாய் 15-20
  15. தேங்காய் துருவல் 1 கப்
  16. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  17. கிராம்பு 6-7
  18. பிரிஞ்சி இலை 2-3
  19. ஏலக்காய் 3-4
  20. இலவங்கப்பட்டை 4-5
  21. உப்பு

வழிமுறைகள்

  1. கழுவப்பட்டச் சிக்கனை எடுத்து 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 2 தேக்கரண்டி சிக்கன் பிரியாணி மசாலா, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது. குறைந்தபட்சம் 1 மணி நேரம் மேரினேட் செய்யவும்.
  2. அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. 2 தேக்கரணடி எண்ணெயை ஒடு கடாயில் எடுத்துச் சூடுபடுத்தி பச்சை மிளகாய், தேங்காய், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு 1 கப் தண்ணீர் எடுத்து வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தை எடுத்து சூடுபடுத்தி, 6 தேக்கரண்டி எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை மீதமுள்ள இஞ்சிப் பூண்டு விழுது மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  5. பொன்னிறமாகும்வரை வறுத்து, 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள், 2 தேக்கரண்டி உப்பு சுவைக்காகச் சேர்க்கவும். 2 மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி பிரியாணி மசாலா ஆகியவற்றைச்சேர்த்து நன்றாகக் கலந்து வறுத்துக்கொள்ளவும். தக்காளி, புதினா, கொத்துமல்லி சேர்த்துக் கலந்து வறுத்துக்கொள்ளவும்.
  6. இப்போது அரைத்தச் சாந்தைச் சேர்த்து மசாலாவில் இருந்து எண்ணெய் பிரியும்வரை வறுத்து, சிக்கன் துண்டுகளைச்சேர்த்து கலந்து 5 மற்றும் 1/2 கப் வெந்நீரைச் சேர்த்து மிதமானச் சூட்டில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. ஊறவைத்த அரிசியைச் சேர்த்து மூடியிட்டு 90% வெந்ததும், கொத்துமல்லி, புதினா இலைகளையும் 1 தேக்கரண்டி நெய்யையும் சேர்க்கவும். தோசைக் கல்லில் பாத்திரத்தை வைத்து மூடி தம்மில் 15 நிமிடங்களுக்குச் சிறுதீயில் வேகவைக்கவும்.
  8. இந்த பிரியாணியை உங்களுக்குப் பிடித்த பக்க உணவுகளோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்