வீடு / சமையல் குறிப்பு / தஹி பாரா, ஆலூ தம் - ஒடிசாவின் பிரபலமான வீதி உணவு

Photo of Dahi Bara, Aloo Dum - the famous street food from Odisha  by Subhasmita Panigrahi at BetterButter
8955
120
4.7(0)
0

தஹி பாரா, ஆலூ தம் - ஒடிசாவின் பிரபலமான வீதி உணவு

Apr-27-2016
Subhasmita Panigrahi
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஒரிசா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 200 கிராம் முழு உளுந்து (குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.)
  2. 2 தேக்கரண்டி ரவை
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. இஞ்சி சிறிய துண்டுகள்
  5. மாங்கா இஞ்சி சிறிய துண்டு (விருப்பம் சார்ந்தது)
  6. 2 கப் தயிர்
  7. 3 கப் தண்ணீர்
  8. 1 தேக்கரண்டி கடுகு எண்ணொய், சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு
  9. 2 காய்ந்த மிளகாய்
  10. 1 பச்சை மிளகாய், நீளவாக்கில் பாதியாகப் பிளந்துகொள்ளவும்
  11. 10-15 கறிவேப்பிலை
  12. பொரிப்பதற்கு எண்ணெய்
  13. 5 நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கு
  14. 2 சின்ன வெங்காயம்
  15. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  16. 2 தக்காளி
  17. 2 காய்ந்த மிளகாய்
  18. 2 பிரிஞ்சி இலை
  19. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  20. 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  21. 1தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.
  22. 1/2 தேக்கரண்டி சீரகம் 2 காய்ந்த மிளகாய், வறுத்து பொறபொறப்பான பொடியாக அரைத்தது.
  23. அலங்கரிக்க:
  24. சாட் மசாலா (விருப்பம் சார்ந்தது)
  25. கருமிளகு (சாட் மசாலா பயன்படுத்தினால் தேவையில்லை)
  26. காரா சேவ்
  27. நறுக்கிய வெங்காயம்
  28. நறுக்கிய புதூ கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. தயிர் வடை தயாரிக்க. ஊறவைத்த உளுத்தம்பருப்பைக் கொண்டு அடர்த்தியான மாவைத் தயாரித்துக்கொள்க. (அதிகம் தண்ணீரசேக்கவேண்டாம். இல்லையேல் வடை போல் வராது.) உப்பையும் ரவையையும் சேர்க்கவும். கலந்து எடுத்து வைத்துக்கொள்க.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், தண்ணீர், இஞ்சித்துருவல், மாங்காய்த்துருவல் சேர்க்கவும். (பயன்படுத்தினால்). எடுத்து வைக்கவும்.
  3. ஒரு கடாயால் 1 தேக்கரண்டி எண்ணொயைச் சூடுபடுத்தி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பிளந்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் தாளிப்பு வாசனை வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.5 நிமிடங்கள் ஆறட்டும் அதன் பின்னர் தயிர் கலவையைச் சேர்க்கவும்.
  4. கைகளால் உளுத்தம்பருப்பு சாந்தை வேகமாக அடிக்கவும். கடினமானது. ஆனால் மிகவும் முக்கியமான செயல்முறை. எவ்வளவு அதிகமாக நீங்கள் அடிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாகக் காற்று மாவினுள் சேரும்.
  5. வடையை பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடாக்கவும். எண்ணொய் மிதமானதுக்கும் கூடுதலாக இருக்கும்போது மாவிலிருந்து சிறிய பகுதிகளை எடுத்து உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
  6. மெதுவாக எண்ணொயில் விடவும். எண்ணொய் அதிக சூடாக இருக்கக்கூடாது. இல்லையேல் வடை வேகாது.
  7. வடை மிதக்க ஆரம்பிப்பதைப் பார்ப்பீர்கள். மேலும் சில வடைகளை எண்ணொயில் போடவும். வானலியில் நெருக்கமாகப் போடவேண்டாம். இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  8. வடை வெந்ததும், ஜல்லிக்கரண்டியால் எடுத்து உடனே தண்ணீரில் போடவும். 5-8 நிமிடங்கள் தண்ணீரில் இருக்கட்டும். பிறகு தண்ணீரிலிருந்து எடுத்து இரண்டு கைகளாலும் பிழிந்து அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டவும்.இதை தயிர் கலவையில் சேர்க்கவும்.
  9. மேலே செய்தபொரித்தல் செயலை மீண்டும் செய்க. மீதமுள்ள மாவுக்கும் தண்ணீரில் ஊறவைத்து தயிர் கலவையில் போடும் செயலை மீண்டும் செய்க.
  10. வடை சமமாக வெந்ததும் கவனமாகத் திருப்பிப் போடவும். அப்போதுதான் தயிரில் சமமாக ஊறும். வடைகள் தயிரில் ஊறும்போது ஆலூ தம்மைத் தயாரிப்போம்.
  11. ஆலூதம்முக்கு. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணொய் எடுத்து காய்ந்த மிளகாய், இலவங்கப்பட்டை, அதன்பின் பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  12. இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து அது மிருதுவாகும்வரையிலும் குழையும் வரையிலும் வேகவைக்கவும். மஞ்சள்தூள், மல்லித்தூள், சிவப்பு மிளகாய் சேர்க்கவும். எண்ணொய் பிரியும்வரை வேகவைக்கவும்.
  13. உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்க்வும். 6-7 நிமிடங்கள் வறுக்கவும். உருளைக்கிழங்குகள் மசாலாக்களால் பூசப்படும் வரை பொன்னிறபாகும்வரை வறுக்கவும்.
  14. கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சேர்க்கவும். குழம்பை கொதிக்கவிடவும் 10 நிமிடங்களுக்கு.
  15. சூட்ன ஆலூ தம்முடன் நறுக்கிய வெங்காயம் சேவ், கொத்துமல்லியால் அலங்கரித்து, நிச்சயமாக வறுத்த சீரகம், சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா ஆகிவற்றால் தூவி தஹி பாராவைப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்