வீடு / சமையல் குறிப்பு / நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம்

Photo of Nepali Alu Dum/ Alu Dum/ Aloo Dum by Manisha Goyal at BetterButter
7118
37
4.4(0)
1

நேபாளி உருளைக்கிழங்கு தம்/ ஆலு தம்

May-04-2016
Manisha Goyal
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு, நடுத்தரமானது (வேகவைத்தது மற்றும் உரித்தது) - 1 கிலோ
  2. பூண்டு - 50 கிராம்
  3. உலர்ந்த சிகப்பு மிளகாய் - 25 கிராம்
  4. கருப்பு சீரகம் / கலோஞ்சி - 1 டீக்கரண்டி
  5. கடுகு எண்ணெய் - 5 தேக்கரண்டி
  6. மஞ்சள்தூள்- 1/2 டீக்கரண்டி
  7. காஷ்மீர் சிகப்பு மிளகாய் தூள் - 1/2 டீக்கரண்டி
  8. தண்ணீர் - 1/2 கப்
  9. சுவைகேற்ப உப்பு
  10. கொத்தமல்லி இலை, நன்றாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. மிளகாயை சூடு தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பூண்டை தோல் உரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். மிளகாய் மற்றும் பூண்டை அரைத்து நன்கு விழுதாக்கி கொள்ளவும்.
  3. அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். கருப்பு சீரகம் சேர்த்ததும் வெடிக்க தொடங்கும்.
  4. பூண்டு விழுது, தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்துக் கொள்ளவும். இதை மூடிவைத்து வேகவிடவும். பின் இடைவிடாமல் கிளறிவிடவும்.
  5. எண்ணெய் தனியாக பிரிந்து போகும் வரை வேகவிடவும். வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  6. தொடர்ந்து வேகவிட்டு உருளைக்கிழங்கு மசாலாவில் சேரும் அளவிற்கு 10 நிமிடம் நன்றாக கிளறிவிடவும்.
  7. கொத்தமல்லி இலையை இதன் மேல்தூவி நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  8. இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்