மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற ஐந்து எளிய கைவைத்திய முறைகள்:

Spread the love

காதலியின் முன் மண்டியிட்டு வேண்டுவது சுகமானதென்றாலும், அந்த மூட்டுப்பகுதியில் வலி ஏற்பட்டால், தாங்கமுடியாத  வேதனையைத் தரும். மூட்டுவலி திடீரென ஏற்பட்டு, அன்றாட வேலையைத் தொடர முடியாமல் செய்துவிடும். இப்பொழுதெல்லாம், பல பெண்கள் இந்த மூட்டு வலி தொல்லையினால் அவதிப்படுகிறார்கள்

மூட்டுவலிக்கு சில எளிய ஆனால் சக்திவாய்ந்த பரிகாரங்கள் இதோ:

 

1.பருப்புக்கீரை:

பருப்புகீரை அடையின் சுவையில் மயங்கியிருப்பீர்கள்.  அந்த பருப்புக்கீரை மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?   தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் பருப்புக்கீரை ஜூஸ் அருந்திவந்தால், நமது உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து, மூட்டுவலி குணமகும்.

 

2.டெய்ஸி எனப்படும் டான்டேலியன் மலரின் இதழ்கள்:

இந்த மலர் இங்கே பிரபலமாக அறியப்படாவிட்டாலும், இதன் மருத்துவ குணங்கள் பல நன்மைகளை அளிக்கிறது.  வைட்டமின் ஏ மற்றும் சி சத்து நிறைந்த இம்மலர், தசைகளிலுள்ள பழுதுகளை நீக்க உதவுகிறது.

 

3.எலுமிச்சை பழம்:

எலுமிச்சை சாறு மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்பதை அறிவீர்களா?  நரத்தங்காடி எனப்படும் சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை,, மூட்டுப்பகுதிகளில், அமிலச் சேர்க்கையை குறைக்கிறது.  மூட்டுப் பகுதியில் சேரும் அமிலங்களால் தான் மூட்டுவலி ஏற்படுகிறது.

 

4.கடுகு எண்ணெய்:

கடுகு எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது

 

5.வெந்தயத் தண்ணீர்:

பழங்காலத்திலிருந்தே, வெந்தயம், உடல் அழற்சியை குறைக்கும் பொருட்கள்  நிறைந்து, சிறந்த  நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகிறது.  வெந்தயத்தண்ணீர் பருகுவதால், மூட்டுப்பகுதிக்கு இதமளித்து, மூட்டு வலியை சிறப்பாக குணப்படுத்துகிறது

 

மூலப்படங்கள் பல்க் ஃபுட், பின்டெரஸ்ட், டைம்ஸ் ஆஃப் இந்தியா, உல் ஓர்த்ஸ், தெ ஃபிட் குளோபல் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *