கோடைக்காலத்தில், தலைமுடியை பாதுகாக்க சில ஆலோசனைகள்

Spread the love

கோடையில்,  வெயிலின் தாக்கத்திலிருந்து நம் உடலைப் பாதுகாப்பதில் நாம் அதிக அக்கறை கொள்வோம். முகப்பூச்சுக்கள், வீட்டிலேயே தயாரிக்கப்படும்  பூச்சுக்கள் எல்லாவற்றையும் உபயோகிக்கும் பொழுது நமது முகத்திற்கே, முக்கியத்துவம் தருவோம். இப்படி, முகத்தைப் பாதுகாத்து பொலிவுறச்செய்யும் முயற்சியில், நாம் நமது தலைமுடியைப் பற்றி அக்கறையின்றி இருந்துவிடுகிறோம்.  தலைமுடி எப்போதும் போல், கோடையிலும் இருக்கும் என நாம் நினைத்துவிடுகிறோம். அடிக்கடி தொலைக்காட்சிகளில் காட்டப்படும் வித வித மான விளம்பரங்களினால், குழம்பி, நமக்கேற்ற பொருள் எது, எது நமது தலைமுடிக்கு பாதிப்பளிக்கும் என்பதை அறிய முடியாமல் இருக்கிறோம்.  நாம் அனுஷ்கா சர்மா சொல்வதைக் கேட்பதா அல்லது ஐஸ்வர்யா ராய் சொல்படி நடப்பதா என்று புரியாமல் இருக்கிறோம்

இந்த விளம்பரங்களைப் புறம் தள்ளுங்கள்.  கோடையில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க, இதோ சில எளிய வழிகள்:

 

1.வெளியில் செல்லும்போது தலைமுடியை  துணியால் மூடிக்கொண்டு செல்லுங்கள்:

கோடை வெயிலில், வெளியில் செல்லும்போது முகத்தை மூடிக்கொள்வதைப் போல தலைமுடியையும் துணியால் போர்த்திக்கொண்டு செல்லவும். சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியில் படுவதால், தலைமுடி காய்ந்து போய் உதிரக்கூடும்.  எனவே, தலையில் தொப்பியோ, துண்டோ அணிந்து கொண்டு செல்வதால், கொடுமையான சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பாய், தலைமுடியில் ஈரப்பத்த்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 

2.குளிக்கும் பொழுது, தலைமுடியை அதிகமாக அலசாதீர்கள்:

தலைமுடியை அதிகமாக அலசுவதால், முடியில் இயற்கையாக அமைந்துள்ள எண்ணெய்ப்பசை போய் வெறுமையாகிவிடும்.  இதனால், உச்சந்தலையில் எண்ணெய்ப் பசை சேர்ந்து நீங்கள் அடிக்கடி, முடியை அலசிக்கொள்வது அவசியமாகிவிடும்.

 

3.அவசியம் தலைமுடியில் எண்ணெய்  தேய்த்து வாரிக்கொள்ளவேண்டும்:

கோடைக்காலத்தில், தலையில் எண்ணெய் தேய்த்து வாரிக்கொள்வதால், வியர்வை அதிகமாவதாக நம்புகிறோம்.  ஆனால், கோடைக்காலத்தில், தலைமுடி தன் ஈரப்பத்தை இழப்பதால், எண்ணெய் தேய்த்துக் கொள்வது அவசியமாகிறது.  தேங்காய் எண்ணெய், பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை மிகவும் உகந்தவை. குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து ஊறிவிட்டுக் குளித்து, தலைமுடியை அலசிக் கொள்வது சாலச் சிறந்தது.  முடியின் ஈரப்பதம் குறைந்துள்ளதாக உணர்ந்தால், வெண்ணெய்ப் பழம், எண்ணெய் மற்றும் கற்றாழைச் சாறு கலந்த பூச்சுக்களை முடிமீது தடவிக்கொண்டு, பிறகு அலசிவிட்டுக் குளித்தால், தலைமுடி காய்ந்து போகும் என்ற கவலையிருக்காது.

 

4.தலைமுடியை அழகு படுத்தி, சீராகவெட்டிக்கொள்ளுதல்:

தலைமுடியை தூக்கிவாரிக் கொள்வது, பன் கொண்டை போட்டுக்கொள்வது போன்றவை அழகுக்காக மட்டுமல்ல, கோடையில், வியர்வை பிரச்சினையையும் குறைக்கும்  ஈரத்துடன் தலைமுடியை வாரிக்கொள்ளாதீர். சரியான இடைவெளியில் அழகு நிலையம் சென்று, உங்கள் தலைமுடியை சீராக வெட்டிப் பராமரியுங்கள்.  தலைமுடியை வாரிக்கொள்ள பிரஷ் உபயோகிக்காமல், நீண்ட இடைவெளியில் பற்கள் அமைந்த சீப்பைக் கொண்டு வாரவும்.  முடி உலர்த்தும் மிஷின் கள் மற்றும் முடியை நேராக்கும் இரும்புத்துண்டுகளை தேவைப்படும் போது மட்டும் உபயோகியுங்கள்

 

5.தலைமுடி “கண்டிஷனர்” உபயோகிப்பது அவசியம்:

ஷேம்பு உபயோகித்த பின்னர், கண்டிஷனர் கண்டிப்பாக உபயோகிக்கவும்.  ஆப்பிள் வினிகரைத் தண்ணீரில் கலந்தும், கண்டிஷனராக உபயோகிக்கலாம்.  தேங்காய் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய் களையும் கண்டிஷனராக உபயோகிக்கலாம்.

 

6.சில ரகசியக் குறிப்புகள்:

கோடைக்காலத்தில், மூலிகைத் தேனீரால், தலைமுடியை அலசிக்கொள்வது, தலைமுடியை பாதுகாக்கும் மிகச்சிறந்த வழியாகும்.  உங்கள் தலைமுடி பிரௌனாக இருந்து, அதனை நீங்கள் அப்படியே பராமரிக்க விரும்பும் பட்சத்தில், முடியை அலசுவதற்கு ப்ளாக் டீ உபயோகிக்கவும்.  சிவந்த முடிக்கு, சிவப்பு இஞ்சி டீ யினை உபயோகிக்கவும். ஆனால், குளிர்ந்த தேனீரைத்தான் உபயோகிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  சூடான டீ யில் அலசிக்கொண்டால், தலைமுடி பாழாகும்.

இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.  இதைப்போல,முடிப்பராமரிப்பில், தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களிடமிருந்து வரும் செய்திகளுக்காக காத்திருக்கிரோம்!

 

மூலப்படங்கள் பிக்ஸபே, க்ளாஸ் பாக்ஸ், ஈவ்னிங் ஸ்டாண்டார்ட், ஃபைண்ட் ஹெல்தி டிப்ஸ், ஹேர்ஸ்டைல் மங்கி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *