Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

அன்றாடம் நாம் உபயோகிக்கும் மின்ணனு சாதனங்களை குழந்தைகள் எளிதில் அணுக முடியாமல் பாதுகாப்பது எப்படி?  – ஏழு ஆலோசனைகள்

தொலைக்காட்சி அல்லது அலைபேசியிலிருந்து தங்கள் குழந்தைகள் கவனத்தை திசைதிருப்பி, அவர்களுடன் உரையாடுவது என்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது.  குழந்தைகள் விரும்பிப்பார்க்கும் யூ-டியூப் மற்றும் கார்ட்டூன் ஷோக்கள் அவர்களது முழு நேரத்தையும் ஆக்ரமிப்பதால், பெற்றோர்களிடம் பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலையே நிலவுகிறது.

தற்காலத்தில், எல்லா வீடுகளிலும், எல்லாவித புதுமையான மின்ணனுச் சாதனகளும் உள்ளபடியால், இயற்கையாகவே, குழந்தைகள் தன் சிறு வயதிலேயே, அதன் செயல்பாடுகளை முழுமையாக அறிந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

குழந்தைகளின் எளிதில் மறந்துபோகும் சுபாவத்திற்கு, பெற்றோர்களே காரணமாகின்றனர். பெற்றோர்களாகிய நாமே, அனைத்து புதிய மின்ணனுச் சாதனகளையும் குழந்தைகளுக்கு உபயோகிக்கக் கூடிய வாய்ப்பினைத் தந்துவிட்டு,  பின் குழந்தைகள் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் என்றறியும்போது அங்கலாய்க்கிறோம்.

குழந்தைகளை அலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்க்காமல் தவிர்க்க வைப்பது நமக்கு பெரும் சவாலான ஒரு விஷயந்தான். குழந்தைகள் அவற்றைத் தவிர்க்க வைக்க சில அலோசனைகளை இங்கே  தருகிறோம்.

 

1.ஒளித்திரைக்காண நமது நேரத்தைக்  குறைத்துக் கொள்வது

 

நமது பழக்கமே, நம் குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும், குழந்தைகள் முன்னால் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி பார்க்கும் நேரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

2. குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் அலைபேசியினை பார்க்கும் நேரத்தைப் பட்டியலிட்டு வைப்பது

இது குழந்தைகள் செயற்பாட்டினை நாம் நிர்வகிக்க உதவும். குழந்தைகளும் தொலைக்காட்சி மற்றும் அலைபேசியினை உபயோகிக்க அனுமதித்ததற்காக சந்தோஷப்படுவார்கள்.

3. குழந்தைகளை விருப்ப வேலை (hobby class) பயிற்சி வகுப்பில் சேருங்கள்

புதிய பல இதன்மூலம், குழந்தைகள்  விஷங்களைக் கற்பது மட்டுமின்றி அவர்கள் தொலைக்காட்சி மற்றும் அலைபேசியுடன் செலவிடும்  நேரமும் குறையும்.

 

4.குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்

இதன்மூலம், குழந்தைகளின் சமூகப் பங்களிப்பும் கூடும், ஆற்றல் சரியான முறையில் இயங்க வழிசெய்யும். வெளியில் சென்று விளையாடுவது, உடல் நலத்தை பாதுகாக்கும் மற்றும் நல்ல பழக்கங்கள் உருவாகக் காரணமாகும்.

 

5. குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளோடு விளையாடுவது

குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்காமல் விளையாடுங்கள். அவர்களை எப்போதும் விருப்ப வேலைகளில் ஈடுபடுத்தி, குழந்தைகள் தங்கள்  நேரத்தை பயனுள்ளதாக செலவிடவையுங்கள்.

 

6. குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் சில விருப்ப வேலைகளைச் செய்யுங்கள்

ஓவியம், கதை படித்தல், புதிர் விளையாட்டு அல்லது குறுக்கெழுத்து போன்றவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து செய்யலாம்   நீங்களும் சேர்ந்து விளையாடுவது, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல; அது அவர்கள் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி யுடன் செலவிடும்   நேரமும் குறையும்.

7. குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள்

பூங்காவில், குழந்தைகள் ஊஞ்சலாடி, சுத்தமான காற்றை சுவாசிக்க வையுங்கள்.  நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால், சோர்வடைவது மட்டுமல்ல; தொலைக்காட்சி பார்ப்பதற்கும் தூண்டுதலாக அமையும்.

 

குழந்தைகளை எந்நேரமும் தொலைக்காட்சி, அலைபேசி உபயோகிகிறார்கள் என்று திட்டுவதை விட்டுவிட மேற்சொன்ன ஆலோசனைகள் உதவும் அல்லவா?  இந்த ஆலோசனைகளை பின்பற்றுவதன்மூலம் தர்க்கரீதியான காரணத்தையும் சொல்ல முடியும். தொலைக்காட்சி மற்றும் அலைபேசியினைத் தொடர்ந்து பார்ப்பதால், கண்கள் மற்றும் மூளை எவ்விதம் பாதிப்படையும் என்பதை, நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, எளிதாகப் புரிய வைக்க முடியும்