இரத்தத்தை சுத்தகரித்து உடல் முழுவதற்கும் அனுப்புவதற்கு உதவும் கல்லீரல், உணவைச் செரிப்பதற்கும் துணை நிற்கும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல், மரபணு கோளாறு அல்லது வேறு நச்சுப் பொருட்களால் பாதிப்படைந்தால், உடல் இயக்கம் சரிவர செயல்படாது.
கல்லீரல் கோளாறை அறிவதற்கு பல்வேறு அறிகுறிகள் உண்டு. பின்வரும் அறிகுறிகளை நீங்கள் கொண்டால் அதனை அலட்சியப் படுத்தாதீர்கள்.
1.மஞ்சள் காமாலை
உடலில் பிலிரூபின் என்னும் நிறமி தங்கினால், தோல் மற்றும் கண்ணில் நிறம் மாற்றம் ஏற்படும். இந்த மஞ்சள் நிறமி பொதுவாக கல்லீரல் மற்றும் இரைப்பையின் வழியாக உடலை விட்டு வெளியேறிவிடும். அவ்வாறு வெளியேறாமல் உடலிலேயே தங்கி உடலுள் நகருமானால், உங்கள் கல்லீரலில் கோளாறு என்று பொருள். இதனுடன் நிறம் மங்கிய மலம், அடர்த்தியான சிறுநீர் மற்றும் உடல் முழுவதும் அரிப்பும் ஏற்படும்.
2.அதீத வியர்வை
ஆம்! வியர்வை கல்லீரல் கோளாற்றின் அறிகுறி தான். பொதுவாக உடற்பயிற்சியின் பின்னரோ அல்லது குளிரூட்டப்பட்ட இடத்தின் வெளியிலேயோ வியர்ப்பது இயல்பு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வியர்ப்பது கோளாற்றின் தெளிவான அறிகுறி. சேதமடைந்த கல்லீரல் மிகுந்த சிரமத்துடன் நச்சு பொருட்களை தோலின் வழியே வெளியேற்றும். இந்த முயற்சியின் காரணமாக உடலின் சூடு அதிகரித்து அளவுக்கதிகமான வியர்வை வெளியேறுகிறது.
3.நீர் தங்குதல்
உடலில் புரதச் சத்து உருவாகுவதையும், அது உடல் முழுதும் சென்று அடைவதையும் சேதமான கல்லீரல் தடை செய்யும். இதனால் உடலில் உள்ள உபரி நீர் வெளியேறாமல் கால், பாதம் மற்றும் குதிகாலில் தங்கும். காலை கட்டை விரலால் நன்கு அழுத்துங்கள். உங்கள் விரலின் அச்சு சில வினாடி நேரம் அப்படியே இருந்தால் அது கல்லீரல் கோளாறினால் வரும் நீர் தங்கும் பிரச்சினையின் அறிகுறி ஆகும்.
4.அடிவயிற்றில் வலி
அடிவயிற்றின் வலது புறம் அல்லது மேல் வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால் அது கல்லீரல் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். தவறான மருந்துகளின் பக்க விளைவாகக் கூட இவ்வகை வலி ஏற்படலாம். மது அருந்துதல் கல்லீரலின் நிலையை மேலும் சேதப்படுத்தலாம். இது உங்கள் அடி வயிறில் விட்டு விட்டு வலியை ஏற்படுத்தும். இதனால் அடி வயிறில் வீக்கம் கூட ஏற்படலாம்.
5.தோலில் புள்ளிகள்
சேதமடைந்த கல்லீரலால் இரத்தத்தை சரிவர சுத்திகரிக்க இயலாது. இதனால் தோலில் சிலந்தி போல் கரும் புள்ளிகள் ஏற்படும். இதனுடன் அல்லாமல், தோலில் நாள்பட்ட அரிப்பு, காய்ந்த சருமம், சிவப்பு கொப்புளங்கள் மற்றும் நிறமாற்றம் ஏற்படும். உங்களது கையில் நரம்பு தெரிந்தால் அது சாதாரண விஷயம் அல்ல. அது சேதமடைந்த கல்லீரலின் அறிகுறி. எனவே உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பட மூலம் – பிலிக்கர், விக்கிபீடியா காமன்ஸ், கீஸ்லர் ஏர்போர்ஸ் பேஸ்

