Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

உங்கள் மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 5 வழிமுறைகள்

கடுமையான வேலைப்பளு காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மேல் அக்கறை காட்ட மாட்டார்கள். சில நேரங்களில், வேலைக்கு அல்லது வெளியே செல்வதற்கு சரியாக உடை அணிந்து செல்வதே பெரும் பாடாக இருக்கும். அதனால் எத்தனை பெண்கள் தங்கள் மார்பகங்களுக்கும் உடலின் மத்த பாகங்களைப் போல  கருதி அக்கறை எடுத்து கொள்ளும் பெண்கள் மிகக் குறைவு. உங்கள் மார்பகங்களைப் பார்த்து கொள்ள இங்கே சில வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன.

 

1.சரியான உள்ளாடையை அணியவும்

மார்புக்கச்சை தேர்வு செய்யும் பொழுது இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் – வயது மற்றும் உபயோகப்படுத்தும் இடம். வீட்டில் இருக்கும் பொழுது பருத்தி கச்சை அணியலாம், வெளியே செல்லும் பொழுது மிருதுவான பஞ்சு பொருத்திய கச்சையை அணியலாம். சரியான அளவில் கச்சை அனியாவிடில் அது மார்பக வலி, சிவந்து போதல்,  தோலில் அரிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுத்தும். உங்கள் மார்பகம் கர்ப்பகாலம், மாதவிடாய் நிற்கும் காலம் அல்லது உடை எடை கூடும் காலங்களில் அளவு மாறுபடும். அதனால் சரியான அளவில் கச்சை அணிவது சிறந்தது.

 

2.இரவில் கச்சை அணியாமல் உறங்கவும்

படிக்க போகும் கச்சை அணிந்தால், அது  சீரான ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். கச்சையுடன் உறங்குவதால் வியர்வையினால் ஏற்படக் கூடிய அரிப்பு மற்றும் பூஞ்சை தோற்று ஆகியவை ஏற்படும். இதனால், உறங்கும் பொழுது கச்சை அணியாமல், மார்பகங்கள் சுவாசிக்க இடம் தருமாறு அறிவுரைக்கப் படுகிறது.

 

3.அசுத்தமான கச்சையை அணியாதீர்கள்

நம்மில் பலருக்கு ஒரே துணியை பல முறை அணியும் பழக்கம் உண்டு. ஆனால் இந்த துணி உள்ளே இருக்கும் உள்ளாடைக்கு நல்லதல்ல. தெரியாமல் நுண்ணுயிரி, பூஞ்சை, எண்ணெய் மற்றும் வியர்வையை உள்ளாடையின் மேல் இந்த துணி அப்பி விடும். அதனால் ஒரு முறை அணிந்த உடன் துணியைத் துவைத்து வைப்பது சிறந்த முறையாகும்.

 

4.மார்பகங்களைத் தினமும் கழுவவும்

உடலின் பிற பாகங்களைப் போல மார்பகத்தையும் சுத்தமாக வைத்திருங்கள். தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சலவை கட்டி கொண்டு மார்பகத்தைக் கழுவுங்கள். பாதுகாப்பாக இருக்கும் உடல் பாகங்கள் ஈரப்பதம் கொண்டு இருப்பதால், அவை எல்லா வகை நோய் தொற்றிற்கும் ஏற்ற இடமாக இருக்கும். எனவே அவற்றை ஈரமில்லாமல் வைத்திருப்பது நலம்.

 

5.வீக்கம் இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்

மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் அல்லது சிரமம் இருந்தால், அல்லது தொடர்ந்து மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரைச் சந்திக்க தாமதம் செய்யாதீர்கள். இது தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது நோயை முற்றிலும் குணப்படுத்த உதவும்.

 

பட மூலம் – மெடடெல்லா, டேவிட்உல்ப், தி பிரேஸ்ட் கேர் சைட், டர்ட்டி டயபர் லாண்டரி, ஐலேண்ட் ஹாஸ்பிடல்