நூறாண்டுகளுக்கும் மேலாக நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத ஒரு மருந்து சியவன்ப்ராஸ் ஆகும். அனைத்து வயதினரும் உட்கொள்ளக் கூடிய மருந்து சியவன்ப்ராஸ் ஆகும். குளிர்காலங்களில் ஏற்படும் இருமல், சளி தொல்லைகள் ஏற்படாமல் இருக்க சியவன்ப்ராஸ் எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை அளிக்கும்.
வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இந்த மருந்திற்கு புதிய நெல்லிக்கனிகள் முக்கிய பொருள் ஆகும். மற்ற தேவைப்படும் பொருள்களை ஆயுர்வேத மருந்து அல்லது மளிகை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பொழுது நாம் கடைகளில் விற்கும் சியவன்ப்ராஸ் சுவைப் போலவே இருக்கும் சியவன்ப்ராஸ் வீட்டில் எளிமையாக தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்:
தேவையான பொருட்கள்:
நெல்லிக்கனிகள் – 250 கிராம்
வெல்லம் – ½ கப்
தேன் – ½ கப்
நெய் – 2 ½ மேஜைக்கரண்டி
பேரிச்சம் பழம் – 6 – 7 (கொட்டைகள் நீக்கியவை)
பொடி செய்ய வேண்டிய நறுமண பொருட்கள்
பச்சை ஏலக்காய் – 3-4
மிளகு – ½ மேஜைக்கரண்டி
இலவங்கப் பட்டை – ½ இன்ச் துண்டு
பெருஞ்சீரகம் – ¾ மேஜை கரண்டி
குங்குமப்பூ – 5 – 6 இழைகள்
செய்முறை:
குக்கரில் கழுவிய நெல்லிக்கனிகள் போட்டு 2 சத்தம் வரும் வரை வேக விடவும். சத்தம் நீங்கும் வரை காத்திருக்கவும். அதற்குள் கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை சுடுநீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெந்த நெல்லிக்கனிகளிலிருந்து அவை ஆறியவுடன் கொட்டைகளை நீக்கவும். அவற்றை ஊற வைத்த பேரிச்சை பழங்களுடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தேவையென்றால் பேரிச்சை ஊற வைத்த நீரை அரைப்பதற்கு உபயோகப் படுத்தலாம். அரைத்த விழுதை தனியாக வைக்கவும்.
இப்பொழுது உலர்ந்த பெருஞ்சீரகம், மிளகு மற்றும் ஏலக்காய்களை பொடி செய்யவும். அவற்றுடன் இலவங்கப்பட்டை மற்றும் குங்குமப்பூ சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு நான் ஸ்டிக் பானில் நெய் ஊற்றி சூடு படுத்தவும். நெய் சூடானவுடன் அரைத்த நெல்லி பேரிச்சை விழுதை அதில் சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடங்கள் கிளறவும். பின் அதில் அரை கப் வெல்லம், அரை கப் தேன் சேர்த்து நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் கிண்டவும். இப்பொழுது பொடித்து வைத்துள்ள உலர்ந்த பொடியை சேர்த்து கலவை சியவன்ப்ராஸ் போன்ற பதத்திற்கு வரும் வரை கிண்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சியவன்ப்ராஸ் செய்வதற்கான முழுமையான முறையை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:
https://www.betterbutter.in/recipe/56653/homemade-chyavanprash
இப்பொழுது உங்கள் வீட்டு தயாரிப்பில் சியவன்ப்ராஸ் தயார். இதை இக்குளிர்காலத்தில் நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் உண்டு மகிழவும்.
Image Source: Public Domain Pictures Pixabay, Wikimedia Commons

