Search

Home / Uncategorized / டான்சிலைடிஸ் –  காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

டான்சிலைடிஸ் –  காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

Subhashni Venkatesh | செப்டம்பர் 20, 2018

டான்சில்ஸ் என்னும் அடிநாக்கு உங்கள் தொண்டையின் பின்புறத்தில் உள்ள இரண்டு சிறு ஓவல் வடிவத்தில் நிணநீர் முனைகள் போல் காட்சியளிக்கும் சதை துண்டுகள். அவை வீக்கமடையும் நிலை டான்சிலைடிஸ் எனப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் பாக்டீரியா அல்லது வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இநோய்க்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில சமயங்களில், மருந்துகளால் குணமாக்க முடியாமல், நோயின் தீவிரம் அதிகரித்த பட்சத்தில் மருத்துவர் அந்த டான்சில் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற பரிந்துரைக்கிறார். எனினும் தொடக்க நிலையில் முறையான கவனிப்பின் மூலம் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்.

 

டான்சிலைடிஸ் நோய்க்கான காரணங்கள்

டான்சில்ஸ் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் முதல் நுழைவு வாயிலாக எந்த தொற்றையும் உடலினுள் நுழைய விடாமல் உங்கள் உடலை பாதுகாக்கிறது. அதனால் இயற்கையாக எந்த ஒரு வெளிப் பொருளும் உங்கள் உடலினுள் தொண்டை வழியாக செல்லும் பொழுது முதலில் பாதிக்கப் படுவது டான்சில்ஸ் தான். ஸ்ட்ரெப்டோகோகஸ் ப்யோஜீன்ஸ் என்னும் கடுமையான நோய் தாக்கும் பாக்டீரியா தான் டான்சிலைடிஸ் உண்டாக காரணமாகும். இதை உண்டாக்கும் வைரசின் பெயர் எப்ஸ்டீன் பார் வைரஸ் ஆகும். டான்சிலைடிஸ் எளிதில் பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் இதை தடுப்பது மிக அவசியம்.

இநோய்க்கான மற்ற காரணங்கள் சக மக்களிடமிருந்து நமக்கு தொற்றக்கூடிய கிருமிகளும், தொற்றுகளும் ஆகும். பெரியவர்களைவிட குழந்தைகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. அதனால் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதை தொடக்க நிலையிலேயே கவனித்தல் அவசியம்.

 

டான்சிலைடிஸ் நோய்க்கான அறிகுறிகள்

டான்சிலைடிஸ் நோயின் தொடக்க நிலையில் தொண்டையில் புண் ஏற்படுவது சகஜம். மற்ற அறிகுறிகள்:

  • குளிர் காய்ச்சல்
  • வயிற்று கடுப்பு
  • உணவை விழுங்கும் பொழுது, மெல்லும் பொழுது தொண்டையில் வலி
  • தொண்டையில் வீக்கம் மற்றும் வெள்ளை, சிவப்பு நிறத்தில் சீழ்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • குறட்டை அல்லது சத்தமாக மூச்சு விடுதல்
  • வீங்கிய சுரப்பிகள்
  • தலை வலி
  • அடிக்கடி சோர்வடைதல்
  • சுவாசத்தில் துர்நாற்றம்

இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அதற்கு தேவையான சிகிச்சை அளிப்பது மிக அவசியம். டான்சிலைடிஸ்  நோய் முற்றிய நிலை அடைந்தால் அது உங்கள் சிறுநீரகத்தை பாதித்து, உயிரையே அச்சுறுத்தும் நோயாக மாறக் கூடும்.

 

டான்சிலைடிஸ் நோய்க்கான சிகிச்சை

மேற்கூறிய ஏதாவதொரு அறிகுறி உங்களிடம் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி அதற்கான சரியான சிகிச்சை பெறவும்.

 

Image source:  Youtube

Subhashni Venkatesh

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன