Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

ஒவ்வொரு பெண்களும் அறிந்துகொள்ளவேண்டிய, கருப்பை புற்று நோய் உண்டாவதற்கான காரணங்களும்

Uterine cancer tamil cover

கருப்பையில் உள்ள அணுக்கள் அபரிமிதமான வளர்ச்சியடையும் போது புற்றுநோய் உண்டாகிறது.  இது கர்ப்பப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.  ஐம்பது வயதைக்கடந்த பெண்களுக்கு இந்த  நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.   மாதவிடாய் சீக்கிரமே நின்றுபோதல் அல்லது  நிற்பது தள்ளிப்போதல், புகைபிடிக்கும் பழக்கம், உடல் பருமன் மற்றும் சில சிறப்பு மருந்துகளை உட்கொள்ளுதல் ஆகியவை மூலம் ஒருவருக்கு இந்நோய் வரக்கூடும்.

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு இந்நோய் அதிகமாக வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில், இந்நோய் தாக்கி மீண்டு வாழ்பவர்கள் 92% ஆகும்.   இந்நோய்க்கான அறிகுறிகள், ஆரம்ப நிலையில் நம்மால் அறிய முடியாத காரணத்தால், இதனை சத்தமின்றி கொல்லும் நோய் என்றழைப்பார்கள்

 

கர்ப்பப்பை புற்றுநோய்க்கான சில காரணங்கள்:

 

1) மரபியல்:

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும், கருப்பை புற்று நோய் இருந்திருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள்அதிகம்.

 

2) சீக்கிரமே மாதவிடாய் ஆரம்பித்தல்:

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய், பதிமூன்று வயதிலிருந்து ஆரம்பமாகும்.  சிலருக்கு முன்கூட்டியே இது ஆரம்பமாகிவிட்டால், அதுவும் கூட, இ ந் நோய் தாக்கப்போவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.  

 

3) உடற் பருமன்:

பெண்கள், அளவுக்கதிகமாக் உடல் பருமனாய் இருப்பதும் இவ்வகை புற்றுநோய் வருவதற்கான காரணமாகும்.    உடற்பருமன் காரணமாக, உடலில் உள்ள கொழுப்புகள் கட்டியாகி, அதுவே புற்றுநோயாக மாறுகின்றது

 

4) ஹார்மோன் மாற்றம்:

கருப்பை சுரப்பிகளும், பெண்மை சுரப்பிகளும் சமனிலையில் இல்லாமல் இருந்தாலும் இந்நோய் வரக்கூடும்.  

 

5) சர்க்கரை வியாதி அல்லது உயர் இரத்த அழுத்தம்:

உடலில் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்நோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

6) மாதவிடாய் நிற்பது தள்ளிப்போதல்:

பொதுவாக, பெண்களுக்கு ஐம்பது வயதில் மாதவிடாய் நின்றுவிடும்.  சிலருக்கு 60-70 வயது வரையிலும் மாதவிடாய் தொடரும். அவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 

7)புகைபிடித்தல்:

அதிகமாக புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கும், இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்  

 

கர்ப்பப்பை புற்று  நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள்

1) இடுப்பு வலி:

உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து வந்தால், மருத்துவரை அணுகவும்.  கொழுப்புக் கட்டிகள் உருவாவதால், கருப்பைகள் அதிக அழுத்தம் பெறுவதாலும் இடுப்புவலி வரக்கூடும்.

 

2) மாதவிடாய் ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்தல்:

உங்களுக்கு மாதவிடாய் ஐந்து நாட்களுக்கு மேலும் தொடர்ந்தாலும், அளவுக்கதிகமாக இரத்தப்போக்கு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.  இது கருப்பை புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

 

3) எப்பொழுதும் சோர்வாக இருத்தல்:

எந்த கடினமான வேலையும் செய்யாதபோதும், நீங்கள் சோர்வடைந்து அடிக்கடி தூங்கவேண்டும் என்ற எண்ணம் வந்தால், அதனை புறந்தள்ளாமல் உடனே மருத்துவரிடம் செல்லவும்.  இதுவும், கருப்பை புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்

 

4) மலங்கழிப்பதில் சிரமமேற்படுதல்:

கொழுப்புக்கட்டிகளின் அளவு பெரிதாகும் போது, குடலை அழுத்துவதால், மலங்கழிப்பதில் சிரமம் ஏற்படும்.  இது தொடர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

    

5) உடலுறவின் போது வலி உண்டாதல்:

புணர்தலில் உண்டாகும் அதிக வலி, டிஸ்பெருன்னியா என்றழைக்கப்படும்  கொழுப்புக்கட்டிகளின் அழுத்தம் காரணமாக, உடலுறவின் போது, அதிக வலி உண்டாகலாம்.  அது கருப்பை புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்

மேற்கண்ட அறிகுறிகள், உங்கள் உடலில் தோன்றினால், தாமதிக்காமல் உடனே, மருத்துவரை அணுகவும்

மூலப்படங்கள் பிக்ஸாபே, பெக்ஸல் பொது இணையதள கோப்புகள், ஹெல்த்.மில், விக்கிமீடியா காமன்ஸ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது