யோனி புண்ணின் காரணங்களும் அறிகுறிகளும்

Spread the love

யோனி புண் என்பது யோனியில் ஏற்படும் ஒரு வகை தொற்றாகும். யோனி மற்றும் உடலின் பிற பாகங்களான வாய் மற்றும் குடலில் ஈஸ்ட் அதிகப்படியாக வளரும். இது பொதுவாக “கேண்டிடியாசிஸ்” என்று அழைக்க படுகிறது. ஏனென்றால், இது கேண்டிடா அல்பிகான்சினால் ஏற்படுகிறது. யோனி புண் ஆபத்தில்லை என்றாலும் கூட, இதன் அறிகுறிகளை கண்டு பிடித்தல் கடினம். சிறிய அளவு ஈஸ்ட் யோனியில் இருந்தால் கூட யோனி புண்ணின் அறிகுறிகள் தென்படலாம். அந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

 

காரணங்கள்

ஆரோக்கியமான வாழ்விற்காக யோனியில் லாக்டோபசில்ஸ் போன்ற  நல்ல பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இருக்கும். இயற்கையாகவே கேண்டிடா என்னும் பூஞ்சை யோனியில் இருக்கும். ஈஸ்ட் அணுக்கள் மற்றும் பாக்டீரியாவின் அளவு மாறுபட்டால், யோனி புண் ஏற்படுகிறது. இந்த அளவு மாற்றத்தை பெரிதும் ஏற்படுத்துவது:

 • கர்ப்பம்
 • மாதவிடாயின் பொது சுரப்பிகளின் அளவு மாற்றம்
 • பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி
 • யோனியின் நல்ல பாக்டீரியாவை குறைக்கும் ஆன்டிபையட்டிக்ஸ் மருந்துகள்
 • புற்றுநோய் திசுக்கள்
 • சர்க்கரை நோய்

 

அறிகுறிகள்

யோனியில் ஈஸ்ட் அணுக்கள் இயற்கையாகவே இருந்தாலும், உடலில் ஏற்படும் காரணங்களால், ஒருவருக்கு இந்த மாதிரி அறிகுறிகள் ஏற்படலாம்:

 • யோனியில் அரிப்பு
 • யோனியில் எரிதல்
 • யோனி வீங்குதல்
 • சிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல்
 • யோனியில் சீல் வடிதல்
 • உடலுறவின் போது வலித்தல்

 

தடுக்கும் முயற்சிகள்

யோனி புண் பரவலாக இருந்தாலும், 75 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்வில் இதை அனுபவித்திருப்பார்கள் என்றாலும், இதை தவிர்க்க சரியான அக்கறை எடுக்க வேண்டும். ஈஸ்ட் தொற்று சிகிச்சை அளிக்காமல் வாரக்கணக்கில் இருந்தால், தீவிர அறிகுறிகளில் முடியும். அதனால் உங்களது யோனி பகுதியை பாதுகாக்க வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

யோனி புண்ணை தவிர்க்க சில வழிமுறைகள்:

 • கேண்டிடா பூஞ்சை சூடான இடத்தில் தங்கும். அதனால் ஜீன்ஸுடன் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்கவும்.
 • உங்களது உள்ளாடைகளை தினமும் சுடுநீரில் அலசவும்.
 • உங்க யோனி பகுதியில் தேவைக்கதிகமாக தண்ணீர் ஊற்றாதீர்கள்.
 • உங்கள் சர்க்கரை அளவை சோதித்து அளவாக இருக்கவும்.
 • யோனி பகுதியில் அடிக்கடி ஈரப்பசை தேறும் களிம்பை போடவும்.
 • ஆண்டிபயாடிக் எடுத்து கொண்டு இருந்தால் ஆன்டிபன்கல் மருந்தையும் தர சொல்லி மருத்துவரை கேட்கவும்.
 • போதுமான தண்ணீர் மற்றும் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.
 • புகை பிடிப்பதைத் தவிர்க்கவும்.

 

பட மூலம்: பிக்ஸாபே, விக்கிபீடியா காமன்ஸ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன