பெண்களின் திடீர் எடை இழப்பிற்கான காரணங்கள்

Spread the love

எடை குறைப்பதற்கு பெரும் முயற்சி செய்யும் பெண்கள் இருக்கும் பொழுது, காரணமே இல்லாமல் சில பெண்கள் திடீரென கடும் எடை இழப்பிற்கு ஆளாகிறார்கள். ஆம்! நீங்கள் அறிந்த பல்வேறு காரணங்களால் இது நிகழலாம். உங்களுக்கும் இது நேருமானால், உங்கள் திடீர் எடை இழப்பிற்கான காரணங்களை அறிய இந்த பகுதியை மேலும் படியுங்கள்.

 

1.ஒட்டுண்ணி

ஒட்டுண்ணிகள் உங்கள் இரைப்பையை தாக்கி வயிறு மற்றும் குடல் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தலாம். இதனால் திடீரெனெ கடும் எடை இழப்பு ஏற்படும். இரவில் அரிப்பு, வாய்ப்புண், அசதி, வீக்கம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுமாயின் அது உங்கள் இரைப்பையைத் தாக்கும் ஒட்டுண்ணிகளின் வேலையாக இருக்கலாம். மருத்துவரை அணுகி உங்கள் இரைப்பையில் இருக்கும் ஒட்டினிகளை அகற்ற சிகிச்சை எடுப்பது நலம்.

 

2.வாதம்

கடும் எடை இழப்பிற்கு முடக்கு வாதமும் ஒரு காரணம். வாதம் என்பது ஒரு கடும் அழற்சி ஏற்படுத்தும் கோளாறு. இது மூட்டு வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பின் சக்தி அனைத்தையும் உறிஞ்சி விடும். அதிக கொழுப்பை எரித்து தீவிர எடை இழப்பை ஏற்படுத்தும். முப்பது முதல் ஐம்பது வயது கொண்ட பெண்களை தாக்கும் வியாதி இது.

 

3.குடல் வியாதிகள்

குடலில் ஏற்பட்ட கோளாறினால் சரியான விகிதத்தில் சத்து உரிய படாமல் கூட எடை இழப்பு ஏற்படலாம். க்ரோன் வியாதி, பால் ஒவ்வாமை, சீலியாக் வியாதி அல்லது குடலில் ஏதேனும் சேதம் இருந்தால் எடை இழப்பு ஏற்படலாம். உடல் செவ்வனே செயல் பட உணவில் உள்ள சத்துக்களை குடல் உரிய வேண்டும். அவ்வாறு நிகழாவிட்டால் குடலில் கோளாறு என்று அறிய வேண்டும். வயிறு மற்றும் குடல் மருத்துவரின் அறிவுரையோடு சரியான உணவு பழக்கம் மேற்கொண்டால் இதை சரி செய்யலாம்.

 

4.தவறான உணவுப்பழக்கம்

ஆரோக்கியமான உணவு இல்லாவிட்டால் அது எடை இழப்பை ஏற்படுத்தும். ஒருவர் வயதாகும் பொழுது, மூலையில் உள்ள பசியைத் தூண்டும் பகுதி பலவீனமடையும். இதனால் பல மணி நேரத்திற்கு பசி எடுக்காது. இவ்வாறு நேரும் பொழுது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு தேவையான சத்துக்கள் உடலில் இல்லாமல் எடை இழப்பு ஏற்படும்.

 

5.மன அழுத்தம் மற்றும் மன சோர்வு

மன சோர்வடைந்த மக்கள் பலர் உண்டு. இவர்கள் அன்றாட வாழ்க்கையில் நாட்டம் காட்ட மாட்டார்கள். இதனால் அவர்களின் உணவுப் பழக்கம் பாதிக்கப்பட்டு எடை குறைய நேரிடலாம். கடும் எடை குறைவதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணம். ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது மூலையில் உள்ள ஹைப்போதலாமஸ்  பசியைக் குறைக்கும். இதனால் எரிச்சல், மன உறுதியின்மை, தூக்கமின்மை மற்றும் எடை இழப்பு ஏற்படும்.

 

6.புற்றுநோய்

வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் கட்டிகள் பல உள்ளன. இந்த புற்றுநோய் மற்றும் கட்டிகள் கொப்புளம் ஏற்படுத்துவதுடன் சத்துகளை உரியவிடாமல் செய்யும். இதனால் எடை இழப்பு ஏற்படும். மருத்துவரை அணுகினால் அவர் உங்கள் உணவுக்குழாய், தொண்டை, சிறுகுடல் மற்றும் பெருங்குடலை ஆராய்ந்து எடை இழப்பின் காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தருவார்.

பட மூலம் – விக்கிபீடியா காமன்ஸ், பிக்ஸாபே, பிக்ஸ்நியோ

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன