Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

படுக்கை புண்ணின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு நிவாரணங்கள்

நகர முடியாதவர்களுக்கு அல்லது மருந்தின் காரணமாக படுக்கையில் இருக்க வேண்டியவர்களை படுக்கை புண் பாதிக்கும். இவை தோல் மற்றும் தோலிற்கு அடியில் இருக்கும் திசுக்களின் மேல் ஏற்படும் அழுத்தத்தால் ஏற்படும் தோல் காயங்கள். “டெக்யுபிட்ஸ் புண்” எனப்படும் படுக்கை புண் பக்கவாதம், நோயால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்கள் மத்தியில் சாதாரணமானது. படுக்கை புண் பொதுவாக உங்கள் கணுக்கால், குதிகால், வால் எலும்பு மற்றும் பிற எலும்பு பகுதிகளில் பாதிக்கும். இதை குணப்படுத்துவது எளிது என்றாலும், குணப்படுத்தாமல் விட்டால், இது மரணம் கூட ஏற்படுத்தும்.

அதனால் படுக்கை புண் பற்றி மேலும் அறிந்து அவற்றை வீட்டிலே எப்படி குணப்படுத்துவது என பார்ப்போம்.  

 

படுக்கை புண் எதனால் ஏற்படுகிறது?

படுக்கை புண்ணின் அறிகுறிகள்

ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்தால் வாழ் எலும்பு அல்லது புட்டத்தில் படுக்கை புண் வருவது சகஜம். அறுவை சிகிச்சை மேற்கொண்டு நகர முடியாத நோயாளிகளுக்கு கீழ் முதுகு, தோள்பட்டை அல்லது முதுகெலும்பில் படுக்கை புண் ஏற்படும். இது அவர்களது கணுக்கால், முட்டி மற்றும் கைகளிலும் ஏற்படலாம். அப்படி பட்ட அறிகுறிகள் தென்பட்டால், அதை உடனடியாக குணப்படுத்தவும் அல்லது அது மோசமானால் மருத்துவரை அணுகவும்.

 

படுக்கை புண்ணை வீட்டில் குணப்படுத்துவது எப்படி?

1.தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உங்கள் தோலை மலர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும் அணைத்து அத்யாவசிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. சிறிது தேங்காய் எண்ணெயை மிதமாக சூடு படுத்தி உங்கள் சருமத்தில் போட்டு மென்மையாக மசாஜ் செய்யவும். பாதிக்கப்பட்ட இடத்தை அழுத்தி தேய்க்காமல் இருக்கவும். இதை ஒரு நாளுக்கு 2-3 முறை செய்வதன் மூலம், படுக்கை புண்ணை அகற்றுவதுடன் மேலும் தோலில் புண்கள் வராமல் பாதுகாக்கலாம்.

 

2.உப்பு தண்ணீர்

ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து தண்ணீருடன் கலக்குங்கள். அதை கொதிக்க வையுங்கள். ஆறின பிறகு, படுக்கை புண் மீது தடவி பிறகு அந்த கலவையை முற்றிலும் கழுவி விடுங்கள். இது படுக்கை புண்களை குணப்படுத்துவதுடன் மேலும் புண்கள் வராமல் பாதுகாக்கும்.

 

3.மஞ்சள்

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்க்கும் குணம், படுக்கை புண்களுக்கு எதிரான ஒரு அற்புதமான வீட்டு நிவாரண பொருளாகிறது. பாதிக்க பட்ட இடத்தில் உப்பு நீரால் கழுவி விட்டு, மஞ்சள் பூசி ஒரு துண்டு துணியால் மூடி வையுங்கள். இவ்வாறு இரு முறை அல்லது மூன்று முறை ஒரு நாளுக்கு செய்யுங்கள்.

 

4.இருக்கும் நிலை

நோயாளியின் அமரும் நிலை அல்லது படுக்கும் நிலையை ஒவ்வொரு 20-30 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றவும். ஒரே நிலையில் பல மணி நேரம் இருப்பதை விட, உங்கள் உடலை கொஞ்சம் நகர்த்தி கொண்டே இருந்தால், குணமாக வாய்ப்பு இருக்கிறது. இது படுக்கை புண் மீண்டும் வருவதை தடுக்கும்.

 

5.குழந்தை பவுடர்

குழந்தைகள் பவுடர் காயம் பட்ட இடத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டு காயத்தை ஆற்றும். முதலில், காயத்தை உப்பு நீரால் கழுவவும் பிறகு குழந்தைகள் பவுடரை மேலே தூவவும். இது சீழ் வடிவதை உறிஞ்சி உலர்வாக வைத்து இருக்கும்.

 

6.பீட்ரூட்டுடன் தேன்

படுக்கை புண்கள் இயற்கையாக குணமாகுவதற்கு பீட்ரூட் உதவும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து காயம் பட்ட இடத்தில் தடவவும். இது காயத்தை ஆற்றுவதுடன் அரிப்பில் இருந்து விடுபட உதவும்.

 

7.சரியான உணவு உண்ணுதல்

சரியான உணவை உண்ணுதல் படுக்கை புண்களை குணப்படுத்துவதற்கு மற்றொரு வழி. தண்ணீர், பழச்சாறு போன்ற நிறைய நீராகாரம் அருந்துங்கள். இவை உடலில் நீர் சத்து கொடுத்து ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். மேலும் வைட்டமின் A, C E நிறைந்த உணவுகள் உண்ணவும். ஆரோக்கியமான தோலிற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் உண்ணவும்.

படுக்கை புண் ஆரம்ப நிலையில் இருந்தால், அதை வீட்டில் எளிதாக குணப்படுத்தலாம் தொழில்முறை உதவி இல்லாமல். ஆனால் பல காலம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், படுக்கை புண்ணை குணப்படுத்த மருத்துவ உதவி தேவை படும், அது சிரமம் கொடுக்கும்.

 

பட மூலம்: பிக்ஸாபே, விக்கிபீடியா காமன்ஸ், மாக்ஸ் பிக்ஸல்