Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

வீட்டு தயாரிப்பான இந்த பழ-முக பேக்குகளை உபயோகப்படுத்தி மின்னும் சருமத்தை பெறுங்கள்

கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த முக பேக்குகளை விட, இந்த பழ-முக பேக்குகள் வசதியாகவும், உபயோகிக்க எளிமையானதாகவும் இருக்கிறது. நம் சருமத்தை சோதனை செய்ய பழங்கள் எப்பொழுதும் பாதுகாப்பான தேர்வு. அவைகளை நாம் உட்கொள்வதால், நம் உள் உடலுக்கு மட்டும் நல்லதல்ல,  நம் சருமமும் மெருகடைகிறது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள முக பழபேக்குகளை உபயோகித்து, எப்போதுமில்லாத அளவு உங்கள் சருமம் மினுமினுப்பதை பாருங்கள்:

 

1.தேனுடன் ஸ்ட்ராபெர்ரி

இது காம்பினேஷன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் இரண்டும் எங்கு உள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சிட்ரஸ் பழம் என்பதால், ஸ்ட்ராபெர்ரி எண்ணெய்பசை மிகுந்த இடத்தில் செயல்படும்  பொழுது, தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்ட்ரைசராக செயல்பட்டு உலர்ந்த சருமத்தை ஈரப்படுத்துகிறது.

மூன்று ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக்கி இரண்டு மேஜைகரண்டி தேனுடன் கலந்து விழுதாக அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து இருக்கவும். மெதுவாக வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவி, துடைக்கவும்.

 

2.ஆரஞ்சு சாறு கலந்த தயிர்

வறண்ட சருமத்திற்கு ஏற்றது. உங்கள் சருமம் மிகவும் உலர்ந்த தன்மையுடையது என்றால், தயிர் அதற்கு ஈரப்பதத்தை அளிக்கும். வைட்டமின் C நிறைந்துள்ள ஆரஞ்சு, சருமத்தின் நெகிழ்வு தன்மையை செம்மைபடுத்தி , கொலாஜன்களை உற்பத்தி செய்து பருக்களை அகற்றி களங்கமில்லாத சருமத்தை தருகிறது.

கால் பகுதி ஆரஞ்சை பிழிந்து அதில் ஒரு தேகரண்டி தேன் மற்றும் தயிர் கலக்கவும். அதை முகத்தில் உலர்ந்த இடங்களில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். மின்னும் சருமத்தை பெற இதை வாரத்திற்கு இருமுறை பின்பற்றவும்.

 

3.பப்பாளியுடன் தேன்

சாதாரண சருமத்திற்கு ஏற்றது. பெரும்பானவர்களுக்கு பிடிக்காத பப்பாளி பழம், சாதாரண மற்றும் வறண்ட  சருமத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த பழ பேக். பப்பாளியில் உள்ள பப்பைன் என்னும் கூறு, இறந்த தோல் செல்களை அகற்றி, பரு உண்டாகும் பகுதிகளை சுத்தப்படுத்தி நிறத்தை கூட்டுகிறது.

பப்பாளி பழத்தை கூழாக்கி அதில் ஒரு மேஜைகரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.  

 

4.வெள்ளரியுடன் பால்

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஏற்றது. வெள்ளரி நம் உடலை குளிர்விப்பதுடன் நம் சருமத்திலும் பல ஆச்சர்யங்களை நிகழ்த்துகிறது. தீ காயங்கள், சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பு , சரும வீக்கம் போன்றவைகளை குணபடுத்தி சரும திசுக்களை வலிமை பெற செய்கிறது. அதன் மூலம் நமக்கு மலர்ச்சியான, புத்துணர்வு தோற்றத்தை அளிக்கிறது.

வெள்ளரியை கூழாக்கி அதில் கால் கப் பால், இரு மஜைகரண்டி தேன் மற்றும் பழுப்பு சர்க்கரை சேர்த்து குழைக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். நல்ல பலன் பெற வாரத்திற்கு இரு முறை இந்த பேக்கை உபயோகப்படுத்தவும்.

 

5.மாம்பழத்துடன் தயிர்

அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது.  நம் அனைவருக்கும் உண்பதற்கு மிகவும் பிடித்த மாம்பழத்தில் வைட்டமின் C நிறைய இருப்பதால் நம் சருமத்திற்கும் மிக்க நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?

நம் சரும நிறத்திற்கு காரணமான நிறமிகளை சரிவர கவனித்து, சருமம் வாடாமல் இருக்குமாறு பார்த்து கொள்கிறது. மேலும் தோல் செல்களை மறு உற்பத்தி செய்கிறது.

மாம்பழ கூழுடன் தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரால் கழுவவும்.