Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

சருமத்தில் ஏற்படும் மச்சம், மருக்கள் நீக்க வீட்டுக்குறிப்புகள்

கிட்டத்தட்ட ஒவ்வொரு நபருக்கும்ம் வெயில் படும் சரும பகுதியிலோ  அல்லது முகத்திலோ மரு, மச்சம் ஏற்பட்டு கஷ்டப்படுவதுண்டு. சிலருக்கு அது இந்த பிரபஞ்ச இயற்கையின் விளைவு மற்றும் சிலருக்கோ இது ஒரு திருஷ்டி கழிப்பு. மச்சம் என்பது திரட்டப்பட்ட நிறமி உயிரணுக்கள் அடர்ந்த நிற புள்ளிகளாக முகம், கழுத்து, கை, கால்களில் தோன்றுவதாகும். சில சமயங்களில், நகங்களின் கீழே, உச்சந்தலையின் மேலே, கால் விரல்களில் கூட காணப்படும். ஆனால் மரு என்பது தீங்கற்ற சிறிய அளவிலான தோல் வளர்ச்சியே ஆகும். பொதுவாக தோல் ஒன்றோடொன்று உரசும் இடங்களில் ஒரு மிகச்சிறிய பலூன் தோலிலிருந்து தொங்குவது போல் காட்சியளிக்கும்.

மச்சம், மரு இவற்றின் நிறம், வடிவம், தோன்றும் இடங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அவை பொதுவாக கறுப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு போன்ற நிறங்களிலும் அவற்றை ஒத்த மற்ற நிறங்களிலும் இருக்கும்.

உங்களுக்கும் இது போன்ற சிக்கல்கள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு மிக்க செலவாகும். இதோ உங்களுக்காக வீட்டிலேயே படிப்படியாக அவற்றை அகற்றுவதற்கான எளிமையான வழிகள்:

 

1.ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் மூலம் மச்சம் மற்றும் மருக்களை அகற்றுவது பழமையான முறையாகும். அதில் உள்ள ரசாயன தன்மை மருவை காயவைத்து உதிர செய்கிறது.

எப்படி உபயோகிப்பது?

 

2.சிதைக்கப்பட்ட பூண்டு

மச்சங்களை அகற்ற , பூண்டு மிகச்சிறந்த வீட்டு நிவாரணியாகும். அதில் உள்ள என்சைம்கள், மச்சம் உண்டாக காரணமாக இருக்கும் நிறமி உயிரணுக்களை உடைக்க உதவுகிறது. மேலும் அடர்ந்த நிறமியின் தன்மையை சிறிது மட்டுபடுத்துகிறது.

எப்படி உபயோகிப்பது?

3.தேன் மற்றும் ஆழிவிதை எண்ணெய் கலவை

ஆழிவிதை எண்ணெய் துருத்திக்கொண்டு இருக்கும் மச்சங்களை அகற்ற மிகவும் உதவுகிறது. அது மச்சங்களை மென்மையாக்கி, பக்கவாட்டில் அவற்றை தளர்த்துவதால், அகற்றுவது எளிமையாக்கப்படுகிறது.

எப்படி உபயோகிப்பது?

 

4.ஆமணக்கெண்ணெய் மற்றும் சமையல் சோடா

இந்தக்கலவை, மச்சம் மற்றும் மருக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. தேவையற்ற, அசாதாரண மரு மற்றும் மச்சங்களை கரைத்து அகற்றுகிறது.

எப்படி உபயோகிப்பது?

 

குறிப்பு: பாதிக்கப்பட்ட பகுதியை, ஒரு கிருமிநாசினி கொண்டு அதன் மேல் தடவி முதலில் சுத்தப்படுத்தவும். பூண்டு எரிச்சலை உண்டாகும் என்பதால், மச்சத்தை சுற்றி உள்ள சரும பகுதியை பெட்ரோலியம் ஜெல்லி அல்லது எண்ணெய் தடவி பாதுகாத்துக்கொள்ளவும்.