சுற்றுப்புற மாசு, வெப்பம், பரம்பரை குணங்கள், வயதாவது மற்றும் சுரப்பிகளின் செயல்முறை மாற்றங்கள் ஆகியவற்றால் உடலில் கருமை படர்வது மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவது என்பது என்னதான் பெண்கள் உடலை பொலிவுடன் வைத்திருக்க ஆசைப்பட்டாலும், தவிர்க்க முடியாத அம்சமாகிறது. கரும்புள்ளி மற்றும் படலங்களை நீக்க பல வேதிப்பொருட்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
வீட்டு வைத்திய முறையில் கரும் புள்ளிகளை அகற்ற இதோ சில வழிகள்
1.வெங்காய, பூண்டு சாறு:
வெங்காயம் உடலில் ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தினாலும், முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க இது ஒரு சிறந்த நிவாரணி ஆகும். பாதி வெங்காயம் மற்றும் இரண்டு மூன்று பற்கள் பூண்டுகளை சாறு பிழிந்து, இரவில் படுக்குமுன், அதனை முகத்தில் தடவிக்கொண்டு ஊறவும். காலையில் எழுந்ததும், முகத்தை கழுவிக்கொள்ளவும்.
2.ஆரஞ்சு தோல் மற்றும் கெட்டித்தயிர்:
ஆரஞ்சு தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி இருப்பதால், உடலிலுள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கொல்லாஜென் எனப்படும் உடம்புலுள்ள இயற்கையான் புரதச்சத்து அதிக அளவு உற்பத்தியாகும்படி செய்கிறது. காயவைத்த ஆரஞ்சு தோலை பொடிசெய்து, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, கெட்டித்தயிருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி, ஒரு 25 நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக்கொள்ளவும்
3.வைட்டமின் ஈ ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்:
வைட்டமின் ஈ மற்றும் பாதாம் எண்ணெய்களில் பலவிதமான வைட்டமின் மற்றும் பைட்டோஸ்ட்ரோல்கள் உள்ளதால்
, உடலிலுள்ள கரும்புள்ளிகள் நீங்க அவை உதவுகின்றன. இரண்டு தேக்கரண்டி பாதாம் ஆயிலுடன் வைட்டமின் ஈ ஆயிலை கலந்து இலேசாக சூடுபண்ணி, , இரவில் படுக்கப்போகுமுன் முகத்தில் தடவிக்கொண்டு படுக்கவும். கரும்புள்ளிகளின் மீது தடவி வட்ட வடிவமாக உருவி விடவும் ஒரு பத்து நிமிடங்கள் இவ்வாறு செய்தபின்பு ஒரு உலர்ந்த துணியால் துடைத்துக்கொள்ளவும்.
4.மோர் மற்றும் தக்காளிச் சாறு:
மோரில் இருக்கும் அல்பா ஹைடிராக்ஸின் மற்றும் தக்காளியில் உள்ள லைகோபின் ஆகியவை கரும்புள்ளிகளை நீக்கி தோல் பொலிவுற இருப்பதற்கு உதவுகின்றன. நான்கு தேக்கரண்டி மோருடன், இரண்டு தேக்கரண்டி தக்காளி சாற்றினை கலந்து தினமும் முகத்தில் தடவி வரவும். ஒரு அரை மணி நேரம் ஊறிய பின்பு முகத்தை கழுவிக் கொள்ளவும்.
5.கொண்டைக்கடலை விழுது:
கனிமங்கள் அதிகமுள்ள கொண்டைக்கடலை முகத்தின் நிறத்தை தக்க வைத்து, கரும்படலம் உருவாகாமல் தடுக்கிறது. ஒரு அரை கப் கொண்டைக்கடலையினை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தினமும் முகத்தில் தடவிக்கொண்டு ஒரு அரை மணி நேரம் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும்
மூலப்படங்கள் க்வோரா, யூ டியூப், க்யூரேட்டர், ஹாட் நியூஸ்24பிடி,சீக்ரெட்ஸ் ஆஃப் பியூட்டி, கூப்சூரத்தி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

