Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

உங்கள் கணவரின் இதய ஆரோக்யத்தை கவனித்துக் கொள்ள  5 எளிமையான வழிகள்

ஒரு மனிதனின் இதய ஆரோக்கியம் அவனின் வயிற்று பசியை தீர்க்கும் சாப்பாட்டு முறையில் தான் இருக்கிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் கூடிய விரைவில் உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி விடும். நீங்கள் சமைக்கும் ஆரோக்ய உணவு உங்கள் கணவரை ஆரோக்யமாக்குகிறது. ஆனால் சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு கடினமான முயற்சி எடுத்தாலும் உங்கள் கணவரின் உண்ணும் முறைகளை மாற்றுவது மிக கஷ்டமாகவே இருக்கிறது. இருந்தாலும் மிக சிறிய  நுட்பமான சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் கணவரின் உணவு திட்டத்தின் பிரச்னையை தீர்க்க முடியும்.

இங்கே கொடுக்கப்பட்டுள சில சிறிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உங்கள் கணவரின் உணவு திட்டத்தை ஆரோக்யமானதாக மாற்றுங்கள்:

 

1.பழங்கள்

உங்கள் கணவரின் உணவில் பழங்களை அறிமுகப் படுத்துங்கள். ஒரு நாளில் ஒருமுறையாவது பழங்களை அவர் உணவில் சேர்த்து கொள்வதில் உறுதியாக இருக்கவேண்டும். அவர் உண்ண வேண்டிய பழங்களின் அளவை அவர்  எடையின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். உங்கள் கணவரின் எடை ஒருவேளை 70 கிலோவாக இருந்தால், அவர் தினமும் குறைந்தது 700 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை அப்படியேவோ, சாலட் அல்லது ஸ்மூதி போன்று செய்தோ உண்ணலாம்.

 

2.கொட்டைகள், விதைகள்

உங்கள் கணவரின் ஆரோக்யத்தில் வியத்தகு ஆச்சரியங்களை உண்டு பண்ணும் மற்றொரு உணவு நிரப்பி நட்ஸ் மற்றும் சீட்ஸ் ஆகும். அதாவது கொட்டைகளும் விதைகளும் ஆகும்.

நிறைவுறா கொழுப்புகள், நார் சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்-E, பிளான்ட் ஸ்டெரோல்ஸ், L- அர்ஜினை மற்றும் புரதங்களால் நிரம்பியது இந்த நட்ஸ். இவை அனைத்துமே கெட்ட கொழுப்புகளை குறைத்து இதயத்தை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது. நட்ஸ்களில் அன்சாட்டுரேடட் (நிறைவுறா கொழுப்புகள்) கொழுப்புகள் நிறைந்து இருப்பதால் அவற்றை மிதமாகவே உண்ண வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 20 கிராம் நட்ஸ்கள் போதுமானது. நட்ஸ்களை சாலட் செய்து, மாலை நேர சிற்றுண்டியாக, கறிகளில் அரைத்து சேர்த்து எந்த முறையிலும் உண்ணலாம்.

 

3.அருந்துங்கள்

ஆம்! அருந்த வேண்டியது மது அல்லது காஃபினேடட் பானங்களை அல்ல. புத்துணர்ச்சி மிக்க மாற்று பானங்கள். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உங்கள் கணவருக்கு இன்ப்யூஸ்ட் நீர் தயார் செய்து அருந்த சொல்லுங்கள். சில சிட்ரஸ் பழங்களான வெள்ளரி, எலுமிச்சை போன்றவற்றை துண்டுகளாக்கி, புதினா இலைகள் சேர்த்து 3 லிட்டர் நீரில் சேர்த்து ஓர் இரவு முழுவதும் வைத்திருக்கவும். இந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து காலையில் நாம் எப்பொழுதும் அருந்தும் சாதாரண நீரைப் போல அருந்தவும். காலை வீட்டை விட்டு செல்லுமுன் ஒரு லிட்டர், மாலை வீடு திரும்பியபின் இன்னொரு லிட்டரும் அவர் அருந்தும்படி பார்த்துக் கொள்ளவும்.

 

4.காய்கறிகள் முயற்சிக்கவும்

உங்கள் கணவருக்கான அனைத்து உணவுகளிலும் முடிந்தவரை காய்கறிகள் மற்றும் மூலிகைகளை (ஹெர்ப்ஸ்) சேர்க்கவும். பூசணி துண்டுகளை சிக்கன் உணவுகளுடன் சேர்க்கவும். மட்டன் உணவுடன் டர்னிப் , கத்திரிக்காய் சேர்க்கவும். ஆம்லட், தோசை, பராத்தாக்கள், பாஸ்தா போன்றவற்றை காரட், ப்ரோகலி, பீன்ஸ், மற்றும் வாசம் மிக்க மூலிகைகள் கொண்டு சுவையூட்டவும். வீட்டில் எப்பொழுதும் காய்கறிகள் வேக வைத்த நீர் வைத்திருக்க வேண்டும். அவற்றை நாம் செய்யும் எந்த பதார்த்ததிலும் தைரியமாக சேர்த்து நாம் சமைக்கும் உணவை மிகவும் ஆரோக்யமானதாக்க முடியும். மேலும் உங்கள் கணவரின் உணவில் வேகவைத்த கொண்டைக் கடலையில் செய்யும் ஹ்யூமஸ் போன்றவற்றையும் அறிமுகப் படுத்தவும்.

 

5.நிறைய வேக வைக்கவும்

எப்பொழுதெல்லாம் நீங்கள் கொண்டக்கடலை, முழு உளுந்து, ராஜ்மா, பச்சை பயறு, காராமணி , சிக்கன், முட்டை போன்றவற்றை மதிய அல்லது இரவு நேர உணவிற்காக வேக வைக்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் கொஞ்சம் அதிகமான அளவு வேகவைத்து, அதிகபட்சத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். மறுநாள் அவற்றுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, விதைகள், கொட்டைகள், பச்சை கீரைகள், எலுமிச்சை, கொத்தமல்லி தழை, வறுத்த சீரக பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து ஆரோக்யமான காலை உணவாகவோ அல்லது மதிய உணவிற்கு சைட் டிஷ் போன்றோ உபயோகப்படுத்தலாம்.

 

மேற்கூறிய மாற்றங்கள் கவனிக்கத்தக்கதாக இல்லாததால் உங்கள் கணவர் அவற்றை கண்டுகொள்ளமாட்டார் மேலும் அவரின் வயிறோ உங்களுக்கு இந்த ஆரோக்ய உணவிற்காக நன்றி சொல்லும்.

image credit: pixabay, wikimedia, staticflickr