ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ற சரியான தேநீர்

Spread the love

ஒரு சரியான, சூடான தேநீரால் சரி படுத்த முடியாதது எதுவும் இல்லை! எப்பொழுதும் அருந்தும் சாதாராண தேநீரை விட, மூலிகை தேநீர் வகைகள் பிரசித்தி பெற்று வரும் நேரம் இது!

இன்று பெட்டர் பட்டர் உங்களின் தலைவலி, தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் 6 வகையான மூலிகை தேநீர் பற்றி கூறுகிறது:

 

1.எலுமிச்சை தேநீர்

தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுதலைப் பெற எலுமிச்சை தேநீர் அருந்தவும். தேன் மற்றும் எலுமிச்சை சாறை வெந்நீரில் கலந்து சிறிது நேரம் கழித்து அருந்தவும். உங்கள் தொண்டைக்கு இதமளிக்கும் இந்த தேநீரில் உள்ள எலுமிச்சையின் வைட்டமின் C தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளித்து புண்ணை குணமாக்கும்.

 

2.தைம் தேநீர் (நீர்பிராமி)

இத்தாலிய சமையலில் உபயோகப்படுத்தப்படும் ஒரு நறுமண மூலிகை இலை இந்த தைம். இது நறுமணத்தை தருவதோடு மட்டுமல்லாமல் மனதை மயக்கும் நறுமணம், பசியை தூண்டும் வாசனை அளிக்கிறது. மேலும் அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் தொண்டை மற்றும் சிறுகுடல் குழாய்களை தளர்த்தி இருமலை சரி செய்கிறது. 2 – 3 தேக்கரண்டி உலர்ந்த தைம் எடுத்து சூடான நீரில் போடவும். சிறிது நேரம் கழித்து அருந்தவும்.

 

3.இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை குளிர்காலங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான நறுமணப் பொருள் ஆகும். ஒரு கப் கொதிக்கும் நீரில் சிறிது இலவங்கப்பட்டை சேர்த்தால் தேநீர் ரெடி. நீங்கள் தினமும் அருந்தும் மசாலா தேநீரில் மற்ற பொருள்களுடன் இலவங்கப்பட்டையும் சேர்த்து அருந்தலாம். இலவங்கப்பட்டையில் இரும்பு சத்து, மாங்கனீஸ், கால்ஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை அனைத்தும் இதில் உள்ளதால் இந்த தேநீர் தலைவலி மற்றும் வேறு சில பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

 

4.கெமோமில் தேநீர்

இந்த தேநீர்  உலர்ந்த கெமோமில் மலர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொதித்த சூடான நீரில் இம்மலர்களை 5 – 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். (திடமான தேநீர் தேவையென்றால், அதிக நேரம் பொட்டு வைக்கலாம்). அவற்றை வடிக்கட்டிய பிறகு தேநீர் அருந்தலாம். இம்மலரில் வலி நிவாரண, எதிர்ப்பு அழற்சி மற்றும் குடல் வலியை நீக்கும் தன்மைகள் உள்ளன. அவை அனைத்தும் வயிற்று வலி, உப்பிசம், வீக்கம், வாயு, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்தாக அமைகிறது.

 

5.பெப்பர் மின்ட் தேநீர்

உடல் சோர்வுக்கு தீர்வாக காஃபின் உடைய  பானங்களை அருந்துவதை  தவிர்த்து புத்துணர்ச்சி தரும் பெப்பர் மின்ட் தேநீர் அருந்துவது நல்லது. புதினா இலைகளை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேநீர் அருந்தவும். இது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உங்கள் உடல் ஆற்றலை அதிகரித்து, பகல் நேரத்தில் உண்டாகும் களைப்பை நீக்கும். உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும் சக்தி பெப்பர் மின்ட்டுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

6.சிமிக்கி பூ தேநீர் ( Passion Flower Tea)

உங்கள் உடல் மற்றும் மனதில் உள்ள அழுத்தத்தை தளர்த்தும் இந்த மூலிகை தேநீர். உடல் மற்றும் மனதை தளர்த்துவதால், இயற்கையாக  தூக்கம் வரும். நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுபவராய் இருந்தால், இந்த மூலிகை தேநீரை அருந்தலாம். இந்த மலரில் அதிகமாக ஃபிளாவனாய்டுகள் மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் இருகின்றன. அவை நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் அளவுடன் செயலாற்றி இடையூறு இல்லாத தூக்கத்தை அளிக்கிறது.

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன