உங்கள் பிறப்புறுப்பு வறட்சியை விரட்டும் 8 உணவுகள்

Spread the love

பிறப்புறப்பு வறட்சிக்கு முக்கியமான காரணம் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு ஆகும். இதற்கான காரணங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தாய்பால் புகட்டல், மாதவிடாய் இறுதிநாட்கள் (மெனோபாஸ்) இரத்த அழுத்தத்தம், மன அழுத்தம், இவற்றிற்கான  மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், கருத்தடை மாத்திரைகள், அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல், கீமோதெரபி போன்றவை ஆகும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கும் மாத்திரைகள் அளிக்கப்படுவதால், அவர்களும் இப்பிரச்சனையால் பாதிக்கப் படுகிறார்கள்.

பிறப்புறுப்பு வறட்சியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, அந்த இடத்தில் வேதனை, அரிப்பு, போன்றவையும், உடலுறவுக்கு பின் எரிச்சலும் உண்டாகும். மேலும் அவ்விடத்தில் வெள்ளை படுதலையும் காணலாம். புள்ளிவிவர கணக்கின் படி கிட்டத்தட்ட 50 சதவிகித பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் பிறப்புறுப்பு வறட்சியை சந்திக்க நேரிட்டாலும், பெரும்பாலோனார் அதைப்பற்றி பேசுவதற்கு தயங்குகிறார்கள். இந்த பிரச்னையிலிருந்து விடுபட மருந்துகள் இருந்தாலும், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள்,  ஃபைடோஎஸ்ட்ரோஜென்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுதல் போன்றவைகளின் மூலம் இப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

 

1.கிரான்பெர்ரிஸ் / குருதிநெல்லி

ஆன்டிஆக்சிடன்ட்கள் வைட்டமின் C மற்றும் வைட்டமின் E கிரான்பெர்ரிஸில் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் பழங்களில் உள்ள அமில கூறுகளுடன் சேர்ந்து தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றன. சிறுநீர் பாதை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.

 

2.சோயா பொருட்கள்

சோயா உணவுகளில் தாவர ஈஸ்ட்ரோஜன்களான ஃபைடோஎஸ்ட்ரோஜென்கள் அதிகமாக உள்ளன. மேலும் அதில் உள்ள நீர் சத்தானது, தசைகளை நீர் தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. பிறப்புறுப்பு வறட்சி உள்ளவர்கள் குறைவாக பதப்படுத்தப்பட்ட சோயா உணவுகளான டோஃபு, டெம்பெஹ் (Tempeh) மற்றும் மிசோ (Miso) போன்றவை பிறப்புறுப்பு பகுதியில் உயவு தன்மையை ஏற்படுத்த உதவுகிறது.

 

3.ஆளி விதைகள் / பிளாக்ஸ் சீட்ஸ்

ஆளி விதைகளில் ஃபைடோஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளன. இவைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஈஸ்ட்ரோஜென்கள் அளவு அதிகரித்து உங்கள் பிறப்புறுப்பு உயவூட்டு படுகிறது.

 

4.யோகர்ட்

யோகர்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாவானது உங்கள் பிறப்புறுப்பின் pH அளவை சமன் நிலையில் வைக்க உதவுகிறது. சமன் நிலையில் இல்லையென்றால் அது உங்கள் பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வறட்சியை ஏற்படுத்துகிறது. உங்கள் உணவில் யோகர்ட் மற்றும் ப்ரோபயோடிக் உணவுகளான கிம்ச்சி (Kimchi), கொம்புச்சா(Kombucha) போன்றவைகளை சேர்த்துக்கொண்டு அதற்கான பலன்களை பெறலாம்.

 

5.மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன், பிறப்புறுப்பு வறட்சியை விரட்ட ஒரு நல்ல உணவாகும்.  சூரை மீன், கெண்டை மீன், கறவை மீன், கண்ணாடி கெண்டை மீன், வெங்கனை மீன், கனன்கெளுத்தி மீன், ஊலம் மீன் போன்ற மீன் வகைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்  நிறைந்த மீன் ஆகும்.  

 

6.சர்க்கரைவள்ளி கிழங்கு / சீனி கிழங்கு

கர்ப்பப்பை சுவற்றை வலுவாக்கக் கூடிய வைட்டமின் A சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகம் உள்ளன. இது உங்கள் பிறப்புறுப்பு தசைகளை ஆரோக்யமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

7.பச்சை இலை கீரைகள்

இவை உங்கள் பிறப்பறுப்பின் ஆரோக்யத்திற்கு மிக நல்லது. அவற்றை தூண்டி, உணவுகளின் ஊட்டச்சத்துக்களை பரப்ப மிகவும் உதவுகின்றன. மேலும் பிறப்புறுப்பு வறட்சிக்கும் மருந்தாகிறது.

 

8.தண்ணீர்

பிறப்புறுப்பு வறட்சியை எதிர்த்து போராட உடலில் நீர் மிக அவசியம். ஒரு பெண் தினமும் சராசரி 6-8 கிளாஸ் சுத்தமான, வடிக்கட்டிய நீர் கண்டிப்பாக அருந்த வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் உடலில் தேவையான நீர் சத்து இருக்கும். மேலும் நீர் சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை உணவில் சுவை மற்றும் நறுமணத்திற்காக சேர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் மூலம் பிறப்புறுப்பு வறட்சியை கையாளலாம் என்றாலும், ஐந்து நாட்களுக்கு மேல் அது தொடர்ந்தால், மகளிர் நல மருத்துவரை கண்டிப்பாக சென்று ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்களை பரிசோதித்து, அதற்கான காரணத்தை கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளிப்பார்.

 

Image source: pixabay, encrypted-tbn0.gstatic.com, staticflickr, pxhere, wikimedia, flickr

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன