உடலின் மிக முக்கியமான வேலையை செய்யும் தசை இதயம் ஆகும். தொடர்ந்து வேலைச் செய்து, இரத்த நாளங்களுக்கு இரத்தத்தை நிலையாக கொண்டுச் செல்லும் இந்த உறுப்பிற்கும் சில சமயங்களில் உதவி தேவை படுகிறது. இயற்கையான முறையில் வேலை செய்துக் கொண்டிருக்கும் இதயத்திற்கு தடை ஏதாவது ஏற்படும் பொழுது மருத்துவ உதவி தேவைப் படுகிறது.
உதாரணத்திற்கு, கரோனரி தமனியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் ஆன்ஜினா என்று சொல்லப்படும் நெஞ்சு அடைப்பு, வலி போன்றவையும், தேவையான இரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலையும் உண்டாகின்றன. இந்த தடையானது, இயற்கையான இரத்த ஓட்டம், தமனி சுவர்களில் சேர்ந்த கொழுப்பால் தடை செய்யப்படும்பொழுது உண்டாகிறது. இது
இரத்தத் தமணிச் சுவர் பாதிப்பு ( atheroma) என்றும் கூறப்படுகிறது. இந்த அடைப்பால் உண்டாகும் அசௌகரியம் மற்றும் வலி ஆஞ்சினா வலி என்றழைக்கப்படுகிறது. மேலும் இரத்தம் இந்த நிலையில் உறைந்து இருக்கும் பொழுது, இதயத்திற்கு தேவையான இரத்தம் கிடைக்காமல் தமனியில் பெரிய தடையை உண்டாக்குகிறது. அதனால் இதயத்தின் ஏதாவது ஒரு தசை வேலை செய்ய இயலாமல் தவிக்கிறது. அது முழுமையாக வேலை செய்ய இயலாத பொழுது மாரடைப்பு உண்டாகிறது. இந்த எல்லா சூழ்நிலைகளுமே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியவை. உங்களுக்கு இதய பிரச்னை இருந்தால், இவற்றை தெரிந்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
இதய நோய்களுக்கு பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. வழக்கமாக கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் கொரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை இவ்வகை நோய்களுக்கு தேவைப் படுகிறது. சுருக்கமாக இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை காண்போம்:
1.கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி
கொரோனரி ஆர்டரியில் படிந்திருக்கும் கொழுப்புகளை அகற்றி, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும் செயல்முறை இது. இந்த முறையில் ஸ்டென்ட் எனப்படும் ஒரு சிறிய கருவி, அடைப்பின் அளவை மற்றும் வகையை பொறுத்து உபயோகப்படுத்தப் படுகிறது. ஸ்டென்ட் குழாய்கள் இறுக்கமாக ஆர்டரியின் மூடிய பகுதிக்கு அருகில் பொருத்தப் படுகிறது. அதனால் இரத்த ஓட்டத்தை கட்டுபடுத்தி மறு உற்பத்தி செய்ய முடிகிறது.
2.திறந்த இதய அறுவை சிகிச்சை
சில நிகழ்வுகளில், ஆஞ்சியோகிராம் செய்து முடித்த பிறகு, மருத்துவர் உங்களுக்கு கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை எனப்படும் திறந்த இதய அறுவை சிகிச்சை பரிந்துரைப்பார். இந்த வகை அறுவைசிகிச்சையில், முழுமையாக அடைப்பு ஏற்பட்ட பகுதிக்கே இரத்தத்தை செல்லவிடமால் அந்த இடத்தை புறக்கணித்து இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
3.இதய வால்வு அறுவை சிகிச்சை
இதய வால்வு முழுமையாகவோ, பகுதியாகவோ பழுதடைந்திருந்தால் புதிதாக வேறு வைக்கப்படுகிறது. அல்லது சரி செய்யப்படுகிறது. அதே போல் இதயமுடுக்கி எனப்படும் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சையில், இதய துடிப்பை கட்டுப்படுத்தும் இயற்கையான பேஸ்மேக்கர் சரி செய்யவோ வேறு புதிதாக பொருத்தவோ படுகிறது.
4.இயந்திரங்கள் மூலம் நிலையை கட்டுப்படுத்துதல்
அடைப்பட்ட வால்வுகளை மருந்துகள் மூலமாக சரி செய்யவோ, தமனிகளில் ஏற்பட்ட அடைப்பை குறைக்கவோ செய்யலாம். இதை தவிர சில புதிய உத்திகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை பின்ன ஊட்ட இருப்பு எனப்படும் Fractional Flow Reserve (FFR), மருந்து கரையும் ஸ்டென்ட் எனப்படும் Drug Eluting Stent (DES), ஆப்டிகல் கொஹெரன்ஸ் டோமோகிராபி (OCT) மற்றும் வெஸல் க்லோஷர் டிவைஸ் (VCD) போன்றவை ஆகும்.
எப்படிப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகும் உங்களுக்கு தீவிர கவனிப்பு சில மணிநேரங்களுக்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப் படும், அதன் பின் சில நாட்களுக்குப் பிறகு மருத்துவர் அறுவை சிகிசைக்குப்பின் நீங்கள் பின்பற்ற அறிவுரைகளை பரிந்துரைத்து மருந்துகள் கொடுத்து, அவசர நேரத்திற்கான ஆலோசனைகளையும் கொடுத்து உங்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பார். முறையான மருந்து மற்றும் உணவுகளுடன் நீங்கள் குறுக்கிய காலத்தில் குணமாகி விடுவீர்கள்.
எல்லா விதமான நிகழ்வுகளிலும், மூச்சு திணறல், மூச்சு நிறுத்தல், நெஞ்சு வலி, அறுவை சிகிச்சை காயத்தில் வீக்கம், அடிக்கடி காய்ச்சல், போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.
மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் இக்காலத்தில் இதய அறுவை சிகிச்சை ஒரு பெரிய விஷயம் இல்லை. ஏனெனில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் முழுமையாக குணமடைந்து உள்ளார்கள். இதய நோய்களை பற்றிய முழு விவரங்கள், முறையான உணவு முறைகள், மருந்துகள், தவிர்க்க வேண்டியவை பற்றிய விழிப்புணர்வு, இவை அனைத்தும் இருந்தால் இந்த இதய நோயை வென்று யாராலும் சாதிக்க முடியும்.
Image Source: pexels, Wikimedia Commons, pixart theindiantelegraph.com.au

