Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

உங்கள் குளியலறைக்கு வாஸ்து குறிப்புகள்!

வாஸ்து சாஸ்திரம் இந்தியாவோடு தொடர்புடையது மேலும் உலகத்தின் பழைமையான விஞ்ஞானத்தில் இது ஒன்று. நாட்கள் செல்ல செல்ல, நிறைய மற்ற நாடுகளும் இதை பின்பற்றுகிறது, ஆனால் வெவ்வேறு பெயர்களில். இது அறிவை பயன்படுத்துவதால்  பிரபஞ்சத்தின் ஆற்றலை புரிந்துகொள்ளவும் மேலும் நன்மைகளுக்காக அதை உபயோகிக்கவும் விளைகிறது, மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் பல வழிகள் இருக்கிறது, அதன் பயனாக ஒருவர் இல்லத்தில் தீய ஆற்றல்களை நீக்கி சந்தோஷத்தையும் அமைதியையும் கொண்டுவர முடியும்.

வாஸ்து சாஸ்திரம் இல்லத்தின் ஒவ்வொரு பகுதியின் முக்கியத்துவத்தையும் பயனையும் புரிந்துகொண்டிருக்கிறது, மேலும் அது சரியான திசையில் சமையலறை, குளியலறை போன்ற இல்லத்தின் வெவ்வேறு அறைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று விளக்குகிறது. இக்காலத்தில் அதிகம் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அல்லது மனைகளிலும் குளிக்கும் இடத்தில் ஒரு கழிப்பறை இருக்கிறது. இந்த வழக்கில், வாஸ்துப்படி உங்கள் வீட்டில் குளியலறை அல்லது கழிப்பறை எங்கே எப்படி அமைக்க வேண்டும் என்பதை உங்களிடம் கூறுகிறோம்.

 

1) கழிப்பறையின் திசை

முதலில், உங்கள் வீட்டின் எந்த மூலையில் ஒரு குளியலறை இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவது முக்கியம் ஆகும். வீட்டின் வட-மேற்கு பகுதி (குறிப்பு- வீட்டின் வட-மேற்கு மூலை அல்ல) குளியலறை கட்டுவதற்கு மிகவும் ஏதுவானது என்று கருதப்படுகிறது.

பிறகு இரண்டாவது இடம் வட-கிழக்கு பகுதி (குறிப்பு- வீட்டின் வட-கிழக்கு மூலை அல்ல) மேலும் வீட்டின் தென்-மேற்கு பகுதி ஆனால் தென்-மேற்கு மூலையில் அல்ல. இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் ஒரு குளியலறையை, மேலே குறிப்பிட்ட திசையின் எல்லா மூலைகளையும் விட்டுவிட்டு அமைக்கலாம். ஜன்னல்களும் மற்றும் காற்றோட்ட துளைகளும் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும்.

 

2) குளியலறை சுவற்றின் வண்ணம்

குளியலறைக்கு சரியான இடத்தை தேர்வு செய்த பிறகு அதன் சுவர் மற்றும் கெய்சர்(வெந்நீர் தரும் சாதனம்), குளியல், குழாய்கள், கண்ணாடிகள்,  கழிவறை இருக்கைகள், வாஷ் பேசின் போன்ற வேறு பொறுத்துதல்களுக்கு, நீங்கள் சரியான அக்கறை கொள்ள வேண்டும். ஷவர் மற்றும் குழாய்க்கு வடக்கு சுவரை பயன்படுத்தவும் அதுபோல் கண்ணாடியை கிழக்கு திசையில் உள்ள சுவரில் மாட்ட வேண்டும்.

கழிவறை இருக்கையை தரையில் இருந்து சற்று உயரமாகவும் மேலும் மேற்கு அல்லது வடமேற்கு திசையில்  அமைக்கவும். கெய்சருக்கு(வெந்நீர் தரும் சாதனம்), தென்-கிழக்கு திசை சிறந்தது மேலும் குளியல் தொட்டிக்கு, மேற்கு திசை; கிழக்கு திசை பகுதியை வாஷ் பேசின்காக விடவும். சுவர்களில் பிரகாசமான ஆனால் லேசான வண்ணங்களில் வர்ணம் பூச வேண்டும்.

 

3) குளியலறையில் வைக்கும் பொருட்கள்

குளியலறையின் தேவையானவற்றை இருப்பு வைக்க அலமாரி(கிளோஸட்) பொறுத்த விரும்பினீர்கள் என்றால், பின் அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். துணி துவைக்கும் இயந்திரம்(வாஷிங் மெஷின்) வைக்க சரியான இடம் தென்கிழக்கு அல்லது வடகிழக்கு ஆகும்.

 

4) மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்ற முக்கியமான விஷயங்கள்

குளியலறையின் முன்கதவு கிழக்கு அல்லது வடக்கு சுவரில் இருக்க வேண்டும்.
ஒரு புதிய வீடு திட்டமிடும்போதோ அல்லது புதுப்பிக்கும்போதோ ஒரு கட்டிட வடிவமைப்பாளரின் உதவியை கேட்பது சிறந்த தேர்வு ஆகும், அதனால் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்நிறையான ஆற்றல் இருக்கும்.


படத்தின் ஆதாரம்: பிக்ஸாபே, விக்கிமீடியா காமன்ஸ்