உங்கள் உடலில் ஏற்படும்  ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகள்

Spread the love

மாதவிடாய் இறுதி நாட்கள் எனக் கூறப்படும் மெனோபாஸ் சமயங்கள் அல்லது மாதவிடாய் நேரங்களில்தான் தான் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. வேறு சில காரணங்களாலும் அது ஏற்படலாம். பொதுவாக இப்பிரச்சினை 30களின் தொடக்கம் அல்லது 50களின் இறுதியில் உண்டாகிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட சில மருந்துகளின் விளைவினாலும், ஆரோக்யமற்ற உடல் நிலையினாலும்  இது ஏற்படலாம். அதனால் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய அறிகுறிகளை அறிந்துக் கொண்டு, அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஆரோக்யமான வாழ்வை வாழலாம்..

உங்களை எச்சரிக்கும் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கான அறிகுறிகள்

 

1.தூக்கமின்மை

உங்களின் தடையற்ற நீண்ட நேர தூக்கத்திற்கு உதவுவது புரோஜெஸ்ட்டிரோன் என்னும் ஹார்மோன் ஆகும். இந்த குறிப்பிட்ட ஹார்மோன் உங்கள் உடலில் குறைவாக இருந்தால், நீங்கள் தூங்காமல் விழித்திருப்பீர்கள். மற்றொரு காரணம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைபாடு. மாத விடாய் இறுதி நாட்களுக்கு பின் மற்றும் முன் ஏற்படும் இந்த நிலையால் தூக்கமின்மை, ஹாட் ப்ளாஷ் நிலை போன்றவை ஏற்படுகிறது.

 

2.மார்பகங்களில் மாற்றங்கள்

ஈஸ்ட்ரோஜன் அளவின் அதிகரிப்பு அல்லது குறைபாடால், மார்பக திசுக்களின் அடர்த்தி பாதிப்படைகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் பொழுது மார்பக  திசுவின் அடர்த்தி குறைகிறது, ஈஸ்ட்ரோஜன் அளவு கூடும் பொழுது மார்பகத்தில் கட்டி போன்றவை வளர்கிறது. அம்மாதிரி ஏதாவது அறிகுறி தென்பட்டால் மருத்துவரை அணுகவும்.

 

3.முடி கொட்டுதல்

திடீரென அதிகமாக தலை முடி கொட்டுவதற்கு காரணம் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் அல்லது ஷாம்பூவா என நீங்கள் ஆராய்வீர்கள்! ஆனால் நிஜக் காரணம் வேறாக இருக்கும். ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இருக்கலாம். தைராய்ட் சுரப்பு, இன்சுலின் சுரப்பு குறைபாடு அல்லது மாற்றங்களால் அதிக முடி இழப்பு ஏற்படலாம். அதை மருத்துவரை அணுகி உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

 

4.அலைபாயும் மனம்

ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளின் மற்றொரு பொதுவான அறிகுறி அடிக்கடி மன மாற்றம் அல்லது அலை பாயும் மனம். ஹார்மோன் அளவுகள் மாறுபடும் நேரங்களில் பெண்கள் அதிகமாக உணர்ச்சி வயப் படுகின்றனர். மேலும் அதிக கோபம், எரிச்சல், பதட்டம் போன்றவையும் ஏற்படுகிறது. மாதவிடாய் இறுதி சமயங்களில் வரும் மன பதற்றம், மாற்றம் போன்றவை நீங்கள் முன்னரே அறியக்கூடியவை. ஆனால் மற்ற நேரங்களில் இவ்வாறு நேர்ந்தால் உங்கள் உணவு முறை, வழக்கம் போன்றவற்றை ஆராய வேண்டும். மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. உப்பு, சர்க்கரை, காப்பி போன்ற உணர்ச்சிகளை தூண்டச் செய்யும் கலவைகளை தவிர்ப்பது நலம்.

 

5.அடிக்கடி உண்டாகும் தலைவலி

தலைவலி என்பது பொதுவாக பல காரணங்களால், உங்கள் உடல் ஆரோக்ய சம்பந்தமாக, மாதவிடாய் சுழற்சி சமயங்களிலும் ஏற்படும் ஒன்று. ஆனால் எந்த ஒரு குறிப்பிட காரணமும் இல்லாமல் அடிக்கடி தலை வலி ஏற்பட்டால், அதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைபாடு.  அதன் தாக்கம் உங்கள் மூளை மற்றும் உடல் மெட்டபாலிசத்திற்கு ஏற்படுகிறது. அதன் பலனாக உங்களுக்கு கடுமையான தலை வலி அல்லது மைக்ரைன் உண்டாகிறது. இதற்கு மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும்.

 

6.உடல் எடையில் திடீர் மாற்றம்

எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் உங்கள் எடை திடீரென குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்தால் அது உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கான எச்சரிக்கை ஆகும். உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் கார்டிசோல் அளவில் மாற்றம் ஏற்படும் பொழுது உடலில் அதிக அளவில் கொழுப்பு தங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. தடுமாறும் மன நிலையை ஈடு செய்வதற்காக கொழுப்பு மிகுந்த, இனிப்பு போன்ற அதிக உணவை உண்ண விரும்புவீர்கள். அதன் பலனாக எடை அதிகரிக்கும். மேலும் நீங்கள் உங்கள் தைராய்ட் சுரப்பு அளவையும் பரிசோதித்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் அது உங்கள் உடல் மெட்டபாலிசம் மீது நேரிடையான தாக்கத்தை உண்டாக்கும்.

 

7.வியர்வை

எந்த காரணமும் இல்லாமல் ஏற்படும் திடீர் மற்றும் அதிக வியர்வையும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் அறிகுறியே. நம் மன நிலையை பொறுத்து உடலுக்குள் ஏற்படும் வெப்ப நிலையின் வெளிப்பாடே இந்த வியர்வை மற்றும் ஹாட் ப்ளாஷ் என சொல்லப்படும் நிலை ஆகும். அது உங்கள் மன நிலை மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தபடாத விஷயம் என்றால் கண்டிப்பாக ஹார்மோன் சம்பந்தப்பட்டது ஆகும். மருத்துவரை அணுகி ஹார்மோன் சமன் சிகிச்சை பெற வேண்டும்.

ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகள் பாரி நீங்கள் மேலும் அறிந்துக் கொள்ள விரும்பினால் கீழே கொடுத்துள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

To learn more about hormonal imbalances, click on the link below: 

Image source: pixabay, public domain pictures, flickr, https://www.facebook.com/enjoy.science/videos/964105073768370/

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன