Search

HOME / பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பை குணப்படுத்தும் ஐந்து தனித்தன்மை வாய்ந்த கைவைத்தியங்கள்

பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பை குணப்படுத்தும் ஐந்து தனித்தன்மை வாய்ந்த கைவைத்தியங்கள்

Nithya Lakshmi | జూన్ 14, 2018

BLOG TAGS

Home remedies

பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பை குணப்படுத்தும் ஐந்து தனித்தன்மை வாய்ந்த கைவைத்தியங்கள்

பித்தவெடிப்பு, பொதுவாக பெண்களுக்கு மிகுந்த வேதனையைத் தரக்கூடிய சிம்மசொப்பனமாகும்.   பாதங்கள் உலர்ந்து போய் எண்ணெய்ப்பசையற்று காய்ந்து போயிருக்கும். பாதத்தின் தோல்கள் பருத்து, உலர்ந்து இருப்பதுடன், சிவந்துபோதல், அரிப்பு ஏற்படுதல், வீக்கமடைதல், தோல் உரிதல் போன்ற தொல்லைகளும் ஏற்படக்கூடும்.  ஈரப்பதமின்மை, மாசுபடிதல், எக்ஸிமா, சோரியாஸில் போன்ற தோல் வியாதிகள் கூட, பித்தவெடிப்பு உண்டாக காரணமாகும்.  

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து விதமான கைவைத்திய முறைகள் பித்தவெடிப்பை குணப்படுத்துவது மட்டுமல்லாது, பாதங்களை மென்மையாக்கி, அழகுற உங்களை நடந்துசெல்ல வைக்கும்

 

1.அரத்திக்காடி என்றழைக்கப்படும் ஆப்பிள் சிடர் வினிகர்:

இந்த வினிகரில் உள்ள இலகுவான அமிலங்கள் செயலிழந்த தோல்களை உயிர்ப்பித்து வெடிப்புகளின் மேற்படலங்களை பிரித்துவிடுகிறது.  இதன்மூலம் தோலின் அடிப்பகுதிகள் ஆரோக்கியமடைகின்றன. ஒரு அகண்ட பாத்திரம், இளஞ்சூடான நீர், வினிகர் இது மூன்றும்தான் உங்களுக்குத் தேவை.

செய்முறை: ஒரு அகண்ட பாத்திரத்தில் மூன்று அல்லது நான்கு கோப்பை இளஞ்சூடான தண்ணீரை விட்டு அதனுடன் ஒரு கோப்பை ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து அதில் மூழ்கும் படியாக பாதங்களை ஒரு பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.  ஒருநாள் விட்டு ஒருநாள் இதனை செய்தால், சிறந்த பலனைப்பெறலாம்.

 

2.தாவர எண்ணெய்:

நிகரஊட்டம் (hydrogenenated) செய்யப்பட்ட தாவர எண்ணெயில் உள்ள கொழுப்புச்சத்து தோல்களை வலிமையாக்கி, பித்தவெடிப்பை நீக்குகிறது  

செய்முறை:  இரவு படுக்குமுன், பாதங்களை நன்றாக கழுவி, சுத்தமான துண்டால் துடைத்துக்கொள்ளவும்.  பித்தவெடிப்பின் மீது, இரண்டு தேக்கரண்டி தாவர எண்ணையை, நன்றாக வெடிப்பின் உள்ளே பரவும்படி விடவும். அதன்மீது ஒரு சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கவும். மறு நாள் காலையில் எழுந்து, பாதங்களை  நன்றாக கழுவிவிடவும்

 

3.சமையல் சோடா:

சமையல் சோடா செயலிழந்த செல்களை நீக்கி மேற்படலப்பிரிப்பின் மூலம் அடித்தோல்களை வலிமையாக்கும் ஒரு சிறந்த நிவாரணி ஆகும். இது வீக்கத்தை குறைக்கும் சக்தி கொண்டது   

செய்முறை:  ஒரு பக்கெட்டில் மூன்றில் இரு பங்கு இளஞ்சூடான தண்ணீரை நிரப்பி, அதில் மூன்று தேக்கரண்டி சமையல் சோடாவை கலக்கவும். சமையல் சோடா நன்றாக தண்ணீரில் கரையும் வரை கலக்கவும்.  அதில் உங்கள் பாதங்களை பத்து-பதினைந்து நிமிலங்கள் வைத்திருந்து பிறகு பாதங்களை சோப்புக்கல்லினால் தேய்க்கவும் ஒவ்வொரு வாரமும் இதனை தொடந்து செய்வது சிறப்பான பலனைத் தரும்

 

4.அரிசி மாவு:

செயலிழந்த தோலின் மேற்படலத்தை நீக்க, அரிசிமாவு கைவைத்தியமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  தசைகளை புத்துணர்வாக்கி, மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது

செய்முறை:  இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அரிசிமாவுடன் சில துளிகள் வினிகர் மற்றும் தேன் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.  இளஞ்சூடான நீரில் பாதங்களை பத்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் இந்த கலவையை பாதங்களில் தடவிக்கொள்ளவும்.  வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்வதால், பாதங்கள் மிருதுவாக இருக்கும்.

 

5.லிஸ்டரைன்(Listerine):

லிஸ்டெரினில் பாதங்களை சிறிது  நேரம் ஊற வைத்தால், செயலிழந்த தசைகளை உயிர்ப்பிக்கும். லிஸ்டெரின் சிறந்த  நச்சுக்கொல்லியாகவும், அதில் பச்சைகற்பூரம், ஓமம் போன்ற தாவர வேதிப்பொருட்கள் இருப்பதால் தசைகள் மிருதுவாக இருப்பதற்கு உதவும்

செய்முறை: இரு கோப்பை லிஸ்டரின், இரண்டு கோப்பை வெள்ளை வினிகர், இரண்டு கோப்பை தண்ணீர் ஆகியவற்றை கலந்து அதில் பாதங்களை பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு சோப்புக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து வந்தால், செயலிழந்த செல்களை நீக்க உதவும். பிறகு பாதங்களை சுத்தமான நீரில் கழுவி, ஈரமில்லாமல் நன்கு துடைத்து விடவும்

 

மூலப்படங்கள் மை சிம்பிள் ரெமெடிஸ், போல்ட் ஸ்கை, அர்பன்வைர்ட், எபிக்யூரியஸ், யூ ட்யூப் ஆகியவற்ற்லிருந்து எடுக்கப்பட்டது

 

    SHARE
  • whatsapp
  • fb
  • pin-trust
  • twitter