Home / Recipes / APPAM WITH JAGGERY COCONUT MILK !

Photo of APPAM WITH JAGGERY COCONUT MILK ! by Ramani Thiagarajan at BetterButter
655
1
0.0(0)
1

APPAM WITH JAGGERY COCONUT MILK !

Mar-23-2019
Ramani Thiagarajan
630 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT APPAM WITH JAGGERY COCONUT MILK ! RECIPE

வெல்ல தேங்காய்ப் பாலுடன் ஆப்பம் ஒரு சொட்டு கூட எண்ணெய் சேர்க்காத வெல்லத்தின் நன்மைகளுடன் கூடிய ஆரோக்யமான உணவாகும் !

Recipe Tags

  • Easy
  • Basic recipe
  • Main Dish
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 2 கிண்ணம்
  2. தேங்காய் - 3 கிண்ணம்
  3. ஏலக்காய் தூள் -2 தேக்கரண்டி
  4. சர்க்கரை -3 மேஜைக் கரண்டி
  5. வெல்லம் - தேவைக்கு ஏற்ப
  6. ஈஸ்ட் -1 தேக்கரண்டி
  7. உப்பு -2 தேக்கரண்டி

Instructions

  1. வெல்ல தேங்காய்ப் பாலுடன் ஆப்பம் ! BY ரமணி தியாகராஜன் !
  2. ஒரு பாத்திரத்தில் 2 கிண்ணம் பச்சரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும் !
  3. 2 மேஜைக் கரண்டி ஜவ்வரிசியை ஊற வைக்கவும் !
  4. ஒரு மேஜைக் கரண்டி கெட்டி அவல் ஊற வைக்கவும் !
  5. 1/2 மூடி தேங்காய் துருவிக் கொள்ளவும் !
  6. ஊறிய அரிசியுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும் !
  7. அரைத்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவு எடுத்து ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கஞ்சி காய்ச்சவும் !
  8. நன்கு ஆறியவுடன் ஆப்ப மாவுடன் கலந்து விடவும் !
  9. கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலக்கவும் !
  10. ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி ஈஸ்ட் , 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும் !
  11. அதனுடன் (Lukewarm) வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும் !
  12. ஈஸ்ட் நன்கு பொங்கி வந்தவுடன் ஆப்ப மாவுடன் கலந்து 5 மணி நேரம் மூடி வைக்கவும் !
  13. பொங்கி வந்த ஆப்ப மாவுடன் தேவையான அளவு உப்பு,2 மேஜைக் கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும் !
  14. சூடான (Nonstick) நான்ஸ்டிக் ஆப்ப சட்டியில் கலந்த மாவைச் சேர்க்கவும் !
  15. சட்டியை கைகளில் எடுத்து மாவை நன்கு சுழற்றி விடவும் !
  16. இது போல் துவாரங்கள் வந்த பிறகு மூடி வேக விடவும் !
  17. நடுவில் மெத்தென்ற ஓரத்தில் மொறு மொறுப்பான ஆப்பம் !
  18. மிக எளிதாக தட்டத்தில் மாற்றிவிடலாம் !
  19. தேங்காயை அரைத்து வடிகட்டினால் திக்கான தேங்காய்ப் பால் கிடைக்கும் !
  20. திக்கான தேங்காய்ப் பால் !
  21. ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து அதனுடன் தேவைக்கு தகுந்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்க்கவும் !
  22. கரையும் வரை சூடாக்கவும் !
  23. ஒரு சொட்டு கூட எண்ணெய் சேர்க்காத ஆரோக்யமான வெல்லம் சேர்த்த தேங்காய்ப் பால் ஆப்பம் தயார் !
  24. வெல்ல தேங்காய்ப் பாலுடன் ஆப்பம் !

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE