Home / Recipes / Moringa leaves salna/ soup

Photo of Moringa leaves salna/ soup by Asiya Omar at BetterButter
1553
4
0.0(0)
0

Moringa leaves salna/ soup

Oct-04-2017
Asiya Omar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moringa leaves salna/ soup RECIPE

முருங்கைக்கீரையில் பொதுவாக கூட்டு பொரியல்செய்வோம், சால்னா எங்க ஊர் ஸ்பெஷல். உடலிற்கு வலிமை தரக் கூடியது. மலச்சிக்கலை போக்கக் கூடியது. வாயுத்தொந்திரவு உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடவும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. முருங்கைக்கீரை -2- 4 கப்
  2. வெங்காயம் -2
  3. பூண்டு 4-6 பற்கள்
  4. சீரகம் - அரைஅல்லது 1 டீஸ்பூன்
  5. மிளகாய் வற்றல் கிள்ளியது 2-4 காரத்திற்கு.
  6. உளுத்தம்பருப்பு - 2டீஸ் பூன்
  7. எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  8. தேங்காய்ப்பால் 1 கப் அல்லது அரைக்க வறுத்த அரிசி 2 டீஸ்பூன,தேங்காய் 4 டேபிள்ஸ்பூன் சேர்த்துஅரைத்தது .
  9. உப்பு - சிறிது.

Instructions

  1. முருங்கையிலையை ஆய்ந்து நன்கு அலசி வைக்கவும்.
  2. ஒரு பாத்த்திரத்தில் எண்னெய் விட்டு சீரகம்,உளுத்தம்பருப்பு,வற்றல் தாளித்து நறுக்கிய வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. அத்துடன் கீரை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.அரிசி கழனி ஒரு கப் சேர்த்து வேக விடவும்.
  4. கீரை வெந்ததும் தேங்காய் அரைத்தது அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
  5. கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான முருங்கைக்கீரை சால்னா தயார்.
  7. சுவையான சத்தான முருங்கைக் கீரைச் சால்னா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE