Home / Recipes / Adai Pradhaman

Photo of Adai Pradhaman by Asiya Omar at BetterButter
399
4
0.0(0)
0

Adai Pradhaman

Oct-06-2017
Asiya Omar
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Adai Pradhaman RECIPE

கேரளாவின் பாரம்பரிய ரெசிப்பி. பண்டிகை நாட்களில் நிச்சயம் இந்த பிரதமன் இல்லாமல் இருக்காது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. ரெடிமேட் அடை பேக் - 100 கிராம்
  2. வெல்லம் பொடித்தது -250 கிராம்
  3. தேங்காய் - பெரிய காய் பால் எடுக்கவும்.
  4. ஏலப்பொடி - அரைடீஸ்பூன்,விரும்பினால் சுக்குத்தூள் -அரைடீஸ்பூன்
  5. நெய் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
  6. முந்திரிபருப்பு,பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்
  7. உலர் திராட்சை -1 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. தேங்காயைத்துருவி சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து வைக்கவும்.முதல் பால் திக்காக எடுத்து வைக்கவும்.இரண்டாம் பாலும் எடுத்து வைக்கவும்.
  2. வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளக்கி வடிகட்டி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தேவைக்கு 5 கப் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து அடையை சேர்த்து வேக வைத்து வடிகட்டி எடுக்கவும்.
  4. வடிகட்டிய வெந்த அடையுடன் இரண்டாம் பால் சேர்த்து கொதிக்க விடவும்.ஏலம், சுக்குத்தூள் சேர்க்கவும்.
  5. வெல்லம் இளக்கியது சேர்த்து கலக்கவும்.சிம்மில் வைக்கவும்.
  6. அதன் பின் கெட்டி தேங்காய்ப்பால் சேர்க்கவும்.சூடு நன்கு வரவும் அடுப்பை அணைக்கவும்.
  7. நெய்யில் முந்திரி,பாதாம்,உலர் திராட்சை வறுத்து மேலே சேர்க்கவும்.கலந்து பரிமாறவும்.
  8. சுவையான அடை பிரதமன் தயார். வாழை இலையில் காய்கறிச் சாப்பாடு பரிமாறும் பொழுது இந்த பிரதமன் செய்து அசத்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE