Home / Recipes / Moong dal egg drop

Photo of Moong dal egg drop by Asiya Omar at BetterButter
364
5
0.0(0)
0

Moong dal egg drop

Oct-12-2017
Asiya Omar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moong dal egg drop RECIPE

பாசிப்பருப்புடன் முட்டை சேர்த்து சமைப்பது எங்கள் ஊர் வழக்கம். சுவை அசத்தலாக இருக்கும்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசிப்பருப்பு -75- 100 கிராம்
  2. முட்டை -2
  3. மிளகாய்,மஞ்சள் ,சீரகத்தூள்கள் - தலா கால் டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. பெரிய வெங்காயம்,தக்காளி - 1
  6. பச்சைமிளகாய் - கீறியது -1
  7. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  8. உப்பு - சிறிது
  9. தாளிக்க எண்ணெய் ,நெய் -2 டீஸ்பூன்
  10. கடுகு -அரை டீஸ்பூன்
  11. கிள்ளிய மிளகாய் வற்றல் -1
  12. கறிவேப்பிலை - 2 இணுக்கு.

Instructions

  1. பாசிப்பருப்பை லேசாக மணம் வரும் படி வறுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் தேவைக்கு தண்ணீர், பாதி வெங்காயம்,ஒரு தக்காளி நறுக்கியது,மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்,மேலே சொன்ன தூள் வகைகள் சேர்த்து மூடி 2 -3 விசில் விடவும்.
  3. ஆவியடங்கியவுடன் திறந்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ,முட்டையை விரும்பினால் சிறிது மிளகுத்தூள் சேர்த்து அடித்து கொடி போல் ஊற்றவும்.
  4. அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் நெய் விட்டு,கடுகு,வற்றல், கறிவேப்பிலை வெடிக்க விடவும்.நறுக்கிய பாதி வெங்காயம் சேர்த்து வதக்கி தாளிச்சதை பாசிப்பருப்பு முட்டையில் கொட்டவும்.
  6. சுவையான பாசிப்பருப்பு முட்டை ஊற்றியது தயார்.சோறு,சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE