Home / Recipes / Murungaikeerai navathaniya dosai

Photo of Murungaikeerai navathaniya dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
754
2
0.0(0)
0

Murungaikeerai navathaniya dosai

Nov-21-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. நவதானிய தோசை மாவு - 10 கரண்டி ( மீடியம் ஸைஸ் குழி கரண்டி )
  2. முருங்கை கீரை - 1 கப்
  3. பாசிப்பருப்பு - 4 தேக்கரண்டி
  4. உருளைக்கிழங்கு - 1
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
  8. பச்ச மிளகாய் - 2
  9. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் - 2
  11. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  12. உப்பு - 1 தேக்கரண்டி
  13. புளி கரைசல் - 1 தேக்கரண்டி
  14. எண்ணெய் - 2 தேக்கரண்டி + தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு
  15. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

Instructions

  1. முருங்கை கீரையை ஆய்ந்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி உருளை கிழங்கு நறுக்கி வைக்கவும் பாசிப்பருப்பை பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. தேங்காய்துருவல் மிளகாய் வத்தல் சேர்த்து மிக்ஸியில்அரைக்கவும்
  3. குக்கரில் பாசிப்பருப்பு மஞ்சள்பொடி முருங்கைகீரை உருளைகிழங்கை தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைய வேக வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் தாளிக்கவும்.
  5. பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதக்கியபின் புளி கரைசல் உப்பு சேர்க்கவும்
  7. குக்கரில் வேக வைத்ததை திறந்து கரண்டியால் அல்லது கீரை கடையும் மத்தால் நன்றாக மசிக்கவும்
  8. வதங்கியதுடன் வேகவைத்து மசித்ததை சேர்க்கவும்
  9. அரைத்த விழுதை சேர்க்கவும்
  10. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட்டு சிறிது ஆறவிடவும். இந்த கலவை ஒரு பங்கு என்றால் நவதானிய தோசை மாவு இரண்டு பங்கு என்ற அளவில் எடுத்துக்கொள்ளவும்
  11. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்
  12. தோசைகல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த மாவை விட்டு தோசை வார்க்கவும்
  13. அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும். பொறுமையாக தோசையை திருப்பி போடவும் . அருமையான முருங்கைகீரை நவதானிய தோசை தயார் . தொட்டுக்கொள்ள தயிர் சாலட் போதுமானது. விருப்பப்பட்டால் தேங்காய் / தக்காளி/மல்லி/புதினா சட்னியுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE